நாம் இருவர் நமக்கு ஒருவர் - இது ஏற்றுக்கொள்ள கூடியதா? உங்கள் சாய்ஸ் எத்தனை குழந்தைகள்?

கடைசி இரண்டு வாக்கெடுப்பும் கொஞ்சம் சீரியஸ்ஸான வாக்கெடுப்பா இருந்ததால, இங்கே விவாதத்தில அனல் பறந்துச்சு. அடுத்தும் இன்னொரு ஹாட் டாபிக் கொடுக்கத்தான் ஆசை. இருந்தாலும் எப்போதும் விவாதம் சீரியஸ்ஸா இருந்தா போரடிச்சுடும்ங்கிறதால கொஞ்சம் காமெடி கலந்த டாபிக் இந்த முறை வாக்கெடுப்பிற்கு வந்திருக்கு. அதற்காக இதை ரொம்ப காமெடி மேட்டரா நெனைச்சிட வேண்டாம். இதுவும் ஒரு வகையில சீரியஸ்ஸான மேட்டர்தான். ஆனா, விவாதத்தில அனல் இருக்காது. நிறைய காமெடி இருக்கும்ணு நம்புறேன்.

கொஞ்ச நாளைக்கு முன்னே, இது சம்பந்தமா ஒரு விவாதம் மன்றத்துல நடந்துச்சு. அதை வச்சி வந்ததுதான் இந்த வாக்கெடுப்பு. சிலர் கருத்து சொல்றப்ப, குழந்தைகள் குறைவா இருந்தா அடுத்த தலைமுறையில உறவுகள் இல்லாம போயிடும்னு வருத்தப்பட்டாங்க. இது எந்த வகையில சரியானதுன்னு எனக்கு தெரியல. இரத்த சொந்தங்கள் மட்டும்தான் நமக்கு சொந்தம்னு இன்னமும் நாம ஒரு சின்ன வட்டத்துக்குள்ள வாழறோம் அல்லது வாழ விரும்புறோம்ங்கிறதை இந்த கருத்து சொல்ற மாதிரி எனக்குள்ள ஒரு உணர்வு.

இதுக்கு நீங்க என்ன சொல்றீங்க..? வழக்கம்போல விவாதத்தை தொடங்குங்க. (தனிப்பட்ட யாரையும் தாக்காம..)

பி.கு: அதிகக் குழந்தைகள் வேண்டும் என்று வலியுறுத்தும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள், அந்நாட்டினவராய் இல்லாது, இந்தியராய் மாறி இந்த விவாதத்தில் கலந்து கொள்ளவும். இந்திய சூழ்நிலையை மனதில் வைத்து வாக்கு கொடுங்கள். கருத்து தெரிவியுங்கள்.

இதில் நான் என்ன சொல்ல?
கேட்டதே நான் தான்...
பதிலும் கிடைத்து நான் மட்டும் முடிவு எடுத்தும் விட்டாகிவிட்டது...
ஆனால் நடைமுறைக்கு இன்னும் சிறிது வேலை செய்யவேண்டியுள்ளது.
எனவே 2 குழந்தைகளுக்கு அவசியம் உள்ளது.
எனக்கு தம்பி உள்ளான்...
ஆனால் என குழந்தைக்கு?

எப்படியும் சித்தப்பா, பெரியப்பா குழந்தைகள் என்றால் பேதம் உள்ளது.
சுயநலம் என்று இல்லை...
அவரவர் குழந்தைகள் என்றால் அவரவருக்குத்தானே தெரியும்!!
எனவே 2 குழந்தைகள் அவசியம்.

மன்னிக்கவும்..கூடி விளையாட நிறைய குழந்தைகள் பெற்று கொண்டால் நாளை கூடி விளையாட என்ன , நிற்கவே இடமில்லாமல் போய் விடும்.. இதுதான் நிஜம் . நாம் உணர்வின் வசப்படாமல்,அறிவின் வசப்பட்டு யோசித்தால் இது புரியும்..
சிந்து, மனசளவில் பெரிய ஆளாயிட்டீங்க..ஏன்னா என்னால் தத்து எடுத்து வளக்க முடியுமான்னு தெரியல... குழந்தை பிறப்பை திட்டமிடுவதில் தவறில்லைன்னு நினைக்கிறேன், அனுபவஸ்தற்களின் ஆலோசனையோடு..யார் கண்டா இன்னும் 100 வருடங்கள் கழித்து "அந்த காலத்தில் எல்லாம் பெண்கள் குழந்தை பெற்று கொள்வார்களாம் "என்று டெஸ்ட் ட்யூப் பேபிகள் பேசக்கூடும்..(சும்மா..கற்பனை..) 3,4 குழந்தைகள் ,பேர குழந்தைகள் இருக்கிற தாத்தா ,பாட்டியெல்லாம் முதியோர் இல்லங்களில் இருக்கிறார்கள்.(விதி விலக்கு உண்டு.) ஏற்கனவே 3,4, குழந்தைகள் பெற்றவர்களை தர குறைவாக கூற வில்லை, இனிமேல் பெறும் நாங்கள் யோசிக்க வேண்டும்.. இங்கு(USA) படிப்பதற்கு ஆகும் செலவையும், இந்தியாவில் நாம் படிப்பதற்கு(IIT,REC,govt collages) நம் அரசாங்கம் செலவிடும் தொகையயும் ஒப்பீடு செய்து பார்த்தால் ,அரசாங்கம் நமக்காக எவ்வளவு செலவு செய்கிறது என்பது தெரியும்.நாம் நம் நாட்டிற்காக செய்யும் ப்ரதி உபகாரம் இதுதான்.

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

உலகில் அதிக இளைஞர்களைக் கொண்ட அதாவது இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 47 விழுக்காடுக்கும் அதிகமாக 18 முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா. பண்நாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு இந்தியச் சந்தைகளை மொய்ப்பதற்குக் காரணம் பெருமளவில் நுகர்வோரைக்கொண்ட நாடு இந்தியா. எந்த நாட்டிடமும் கையேந்தி நிற்காமல் அனைத்து துறைகளிலும் தன்நிகரற்று விளங்கும் நாடு இந்தியா. இன்னும் நம் நாட்டின் பெருமையை அடுக்கிக் கொண்‍டே போகலாம் இந்த அசுர வளர்ச்சிக்கெல்லாம் காரணம் மக்கள் தொகை பெருக்கமே... மக்கள் தொகைப் பெருக்க‍மே காரணம்.

50 கோடிப் பேரைக் கொண்ட பாரதம் காணாத வளர்ச்சி 70 கோடிப்பேரைக் கொண்ட பாரதம் காணாத வளர்ச்சி 90 கோடிப் பேரைக் ‍கொண்ட பாரதம் காணாத வளர்ச்சி 100+ கோடிப் பேரைக் கொண்ட பாரதம் சாதித்துள்ளது.

இன்று இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் தொழில்நுட்பத்துறையில் சாதனை படைப்பவர்கள் இந்தியர்களே.
மக்கள் தொகை வளர்ச்சியை தடுப்பதில் அயல்நாடுகள் கடைப்பிடித்த வழிமுறைகளை இந்தியத் தம்பதிகள் கடைப்பிடிக்கவில்லை. நகர்புரங்களில் உள்ள ஒருசில தம்பதிகள் இதற்கு விதிவிலக்கு. ஆனால் கிராமப்புரங்களில் இன்றும் 5, 6 குழந்தைச் செல்வங்கள் வீட்டில் விளையாடத்தான் செய்கின்றன.

ஒரு 50, 60 வருடங்களுக்கு முன் குதிரை வண்டிகளும், ட்ரம் மற்றும் கை ரிக்ஷாக்களும் ஓடிய சென்னை நகர் வீதிகளை நினைவுக்கு கொண்டு வாருங்கள்... இன்றைய சென்னை நகரையும் நினைவுக்கு கொண்டு வாருங்கள்... ("சிலிக்கான் சென்னைக்கு வயது368" என்று நான் எழுதிய தொகுப்பை பாருங்கள் http://thatstamil.oneindia.in/news/2007/08/22/chennai-turns-368-today.html) தெரிகிறதா வித்தியாசம்.

மக்கள் தொகை பெருக்கம் தான் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை காரணம். ஆனால் இதை தெரியாதவர்கள் தான் மக்கள் தொகை பெருக்கம் கஸ்டம் நஸ்டம் பற்றாக்குறை இன்னும் என்னென்னமோ சொல்வார்கள். அது அல்ல உண்மை.
இன்னும் 1000+ கோடியை தாண்டினாலும் யாருக்கும் எதுவும் பற்றாக்குறை என்று வந்து விடாது அபார வளர்ச்சியையே காணும்.

இந்தியச் சூழலை கருத்தில் வைத்தே கருத்துச் சொல்லியுள்ளேன் ஐயா! நானெல்லாம் ஒரு டசனுக்கு மேல் பெற்றுக்கொள்ள ஆசை... பெற்றுக் கொடுப்பவள் சம்மதித்தாள்?

பிரார்த்தனைகளுடன் உங்கள் சகோதரன்.

தாங்கள் கருத்தை நான் வரவேற்க்கின்றேன்...

அன்புடன்
ஜா...

அன்புடன்
ஜா...

பழைய இழைகளை பார்க்கும்போது இந்த இழை கூட மாட்டுச்சு..கொஞ்சம் இன்டரஸ்டிங்கா இருக்குற மாதிரி இருக்கு..அறுசுவை நண்பர்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாமே..??

Madurai Always Rocks...

என்னை பொறுத்த வரை இது நல்ல விஷயம் தான், இந்தியாவின் மக்கள் தொகை அதிகரித்தலுக்கு நல்ல விஷயம்தான்.

ஆனால், ஏற்கனவே நாம் நமது தாத்தா பாட்டி காலத்துல நடக்கற சம்பிரதாயங்களை மறந்து இருக்கிறோம், அப்படி இருக்கும் போது நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற நிலை வந்தால் குழந்தைகள் தனிமையை உணர்வார்கள், சொந்த பந்தங்களின் அருமை தெரியாமல் போய்விடும்.

நாம் இருவர் நமக்கு இருவர் என்ற நிலை மாறி நாம் இருவர் நமக்கு ஒருவர் என்றாகிவிட்டது, காமெடிக்காக சொல்வதைப்போல் நாமே இருவர் நமக்கேன் ஒருவர் என்ற நிலையும் வரலாம்.

நாம் இருவர் நமக்கு இருவர் என்பது ஓகே:)-

அன்புடன்
பவித்ரா

முன்னலாம் எத்தனை பிள்ளைகளை பெற்றாலும் கவலையில்லை. அருகிலேயே அதிக சொந்தபந்தங்கள் இருந்தார்கள். அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். வளர்ப்பதில் மெனக்கெட தேவையே இல்லை.

ஆனால் இன்றைய காலத்தில் மக்கள் வெவ்வேறு இடங்களில் தனித்து வாழ்கின்றனர். அதனால் குழந்தை வளர்ப்பு என்பது சிரமமான விசயமாக இருக்கிறது. ஒன்று மட்டும் போதும் என்ற மனபோக்கு நிலவி வருகிறது.

எனக்கென்னவோ அது தான் சரி என்று படுகிறது. ஒன்று மட்டுமே வேண்டும். அந்த குழந்தைக்காகவே என் வாழ்க்கையின் முழு அர்த்தம் இருக்கவேண்டும் என்று!

இப்படியே எல்லாரும் நெனச்சா மக்கள் தொகையாவது ஓரளவுக்கு கட்டுபடுத்தலாம்!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மினிமம் இரண்டு குழந்தைகளாவது வேண்டும்.உள்வியல் ரீதியாகவும் அதுதான் பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் பெஸ்ட் என்கிறார்கள்.. குழந்தைகள் அவர்களுக்குள்ளேயே விளையாடி,சண்டை போட்டு சமாதானமும் ஆகிக்கொள்ளும்.ஒரு குழந்தை மட்டுமே எனில் 3 -4 வயதிலேயே அதற்கு மன அழுத்தம் வரும் வாய்ப்புகள் அதிகம் என்றும்.. தீர்வாக மற்ற உறவு/நண்பர்களின் குழந்தைகளை அண்ணன்/தம்பி,அக்கா/தங்கை உறவுகளாக அறிமுகப்படுத்தி பழக விட வேண்டும் என்கிறார்கள்.

சாந்தினி

நீங்க சொல்வது சரி தான். உறவு முறைகளை பழக்கிவிட்டால் குழந்தைக்கு எந்த ஏக்கமும் வராது.

எங்கள் வீட்டில் கூட பெரியப்பா பைய,சித்தப்பா பையன் என குழந்தைகளே அறிமுகப்படுத்தமாட்டார்கள். “உன் கூட வந்தவன் யார்” என கேட்டால் பெரியம்மா பையனாக இருந்தாலும் என் அண்ணன்,என் தம்பி என உரிமையோடு தான் சொல்கிறார்கள். பெரியவர்களும் அப்படியே சிறுவயதிலிருந்து பழக்கிவிடுகிறோம்!

கொழ்ந்தன் மகன்,மச்சான் மகனை மகள்,மகன் என தான் அழைப்பேன்.

அதனால் தான் எங்க வீட்டில் இந்த குறையோடு யாரும் இருப்பதில்லை. ஆனால் நிறைய வீட்டில் இது சாத்தியமா என தெரியவில்லை.

முதலில் விலைவாசி!
150 க்கு கூட நான் ட்ரஸ் வாங்கியுள்ளேன். இப்போது கடைகளில் அது போல் கேட்டால் என்னை முறைப்பார்கள். 500 க்கு குறைந்து இல்லை. விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஒன்று போதும் என்ற எண்ணம் அனைவருக்கும் வருவது இயல்பே!

பள்ளி கூட கட்டணம்!
கையில் 20,000 இருந்தா தான் குழந்தையை நல்ல பள்ளியில் பிரீகேஜி சேர்க்கமுடியும்! இது போக போக இன்னும் கூடுவதில் ஆச்சரியமில்லை. அதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. இன்னும் இருக்கிறது. வருடவருடம் கட்டணம்,காலேஜ் பீஸ், ஹையர் ஸ்டடி......
இதெல்லாம் நம்மால் சமாளிக்க முடியுமா என ஒரு தயக்கத்திலேயே ஒன்று போதும் என்ற முடிவுக்கு வருகின்றனர்.

இன்னும் பேசலாம்.

எல்லாரும் அவரவர் கருத்து சொன்ன பிறகு மீண்டும் பேசுகிறேன்!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

எனக்கு ஒரே பையன் தான் என்றாலும்,பெர்சனலா ரெண்டு இருந்தால் நல்லதுன்னு தான் நிறைய டைம் நினைச்சுருக்கேன்..இப்போ என் பையனுக்கு 11வயசு முடிஞ்சு 12 ஆக போகுது..அவனும் கூட நிறையவே பீல் பண்ணிருக்கான்..ஒரே குழந்தை இருப்பதாலே இந்த காலத்துக்கு பொருளாதாரம்..ஆசை பட்டதை நிறைவேத்துறது..கொஞ்சம் ரிலாக்ஸ் அப்படின்னு சில தனிப்பட்ட நன்மைகள் இருந்தாலும்..என்னவோ கவனம் பூராவும் ஒரே குழந்தை மேலே வைக்கும்போது பெற்றோரே ரொம்பவே அதிகமா அந்த குழந்தை மேலே அதிக திணிப்பு..எதிர்பார்ப்பு எல்லாம் கொடுத்துருவோமானு கூட பயந்துருக்கேன்..இப்படி யோசிச்சு தான் குற்றஉணர்வு கவிதை கூட எழுதினேன்..

Madurai Always Rocks...

மேலும் சில பதிவுகள்