நாம் இருவர் நமக்கு ஒருவர் - இது ஏற்றுக்கொள்ள கூடியதா? உங்கள் சாய்ஸ் எத்தனை குழந்தைகள்?

கடைசி இரண்டு வாக்கெடுப்பும் கொஞ்சம் சீரியஸ்ஸான வாக்கெடுப்பா இருந்ததால, இங்கே விவாதத்தில அனல் பறந்துச்சு. அடுத்தும் இன்னொரு ஹாட் டாபிக் கொடுக்கத்தான் ஆசை. இருந்தாலும் எப்போதும் விவாதம் சீரியஸ்ஸா இருந்தா போரடிச்சுடும்ங்கிறதால கொஞ்சம் காமெடி கலந்த டாபிக் இந்த முறை வாக்கெடுப்பிற்கு வந்திருக்கு. அதற்காக இதை ரொம்ப காமெடி மேட்டரா நெனைச்சிட வேண்டாம். இதுவும் ஒரு வகையில சீரியஸ்ஸான மேட்டர்தான். ஆனா, விவாதத்தில அனல் இருக்காது. நிறைய காமெடி இருக்கும்ணு நம்புறேன்.

கொஞ்ச நாளைக்கு முன்னே, இது சம்பந்தமா ஒரு விவாதம் மன்றத்துல நடந்துச்சு. அதை வச்சி வந்ததுதான் இந்த வாக்கெடுப்பு. சிலர் கருத்து சொல்றப்ப, குழந்தைகள் குறைவா இருந்தா அடுத்த தலைமுறையில உறவுகள் இல்லாம போயிடும்னு வருத்தப்பட்டாங்க. இது எந்த வகையில சரியானதுன்னு எனக்கு தெரியல. இரத்த சொந்தங்கள் மட்டும்தான் நமக்கு சொந்தம்னு இன்னமும் நாம ஒரு சின்ன வட்டத்துக்குள்ள வாழறோம் அல்லது வாழ விரும்புறோம்ங்கிறதை இந்த கருத்து சொல்ற மாதிரி எனக்குள்ள ஒரு உணர்வு.

இதுக்கு நீங்க என்ன சொல்றீங்க..? வழக்கம்போல விவாதத்தை தொடங்குங்க. (தனிப்பட்ட யாரையும் தாக்காம..)

பி.கு: அதிகக் குழந்தைகள் வேண்டும் என்று வலியுறுத்தும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள், அந்நாட்டினவராய் இல்லாது, இந்தியராய் மாறி இந்த விவாதத்தில் கலந்து கொள்ளவும். இந்திய சூழ்நிலையை மனதில் வைத்து வாக்கு கொடுங்கள். கருத்து தெரிவியுங்கள்.

நீங்க கேட்ட இழை இதுதானே, உங்களுக்காகதான் இந்த பதிவு.

அன்புடன்
பவித்ரா

ஆமாம் பவி.. நான் இந்த இழையை பாதி படித்துவிட்டேன்.. பிறகு இந்த இழையை காணோம்.. பட்டி வந்துவிட்டதால் தேடாமல் விட்டுவிட்டேன்.. நானும் அனைவரிடமும் கேட்க வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஒரு பையன் இருப்பதால் என்ன பிரச்சனை வரப்போகிறது என்று... அடுத்த குழந்தை எப்போது என்று எல்லாரும் கேட்க ஆரம்பித்துவிட்டனர். என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.. எனக்கு அடுத்ததும் பையன் பிறக்கக் கூடாது, பிறந்தால் பெண் தான் வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் இதை நிர்ணயிப்பது நமது கையில் இல்லையே.. அந்த பயம் தான் அடுத்த குழந்தை வேண்டுமா வேண்டாமா என்ற கேள்விக்கு தள்ளிவிட்டது...
தோழிகள் இதைப்படித்தால் எனக்கு பதில் போடுவார்கள் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்...
நன்றி பவி.. தேடிக்கண்டுபிடித்து கொடுத்தததற்கு....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

எனது வீட்டில் இப்போது நடப்பது இந்த பட்டிமன்றமே ???எனது குழந்தை UKG படிக்கிறான்.நான் ஒரே பெண் .எனக்கு கூட பிறந்தவர்கள் யாரும் இல்லையே என்று இபோளுதும் கவலை படுவது உண்டு .என் கணவருக்கு எல்லோரும் உள்ளனர் .ஆனால் அவர் ஒரு குழந்தை போதும் என்று சொல்கிறார்.நானோ ரெண்டு வேண்டும் என்று சொல்கிறேன்.என்ன ஆக போகிறதோ.???ஆனால் கட்டாயம் ரெண்டு வேண்டும்.அபோதுதான் அந்த குழந்தைக்கு சப்போர்ட் கிடைக்கும் .

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

ungaladu sindanai arpudam!!

குறைந்த பட்சம் ஒரு வீட்டில் இரண்டு குழந்தைகளாவது இருந்தால் தான் நல்லது என்று நான் நினைக்கிறேன் ..ஏனெனில் ,ஒரு குழந்தை தனியாக வளரும்பொழுது அதற்கு விட்டு கொடுக்கும் முறை .. ஷேர் செய்யும் முறை தெரியால் போய் விடுவதற்கு நிறைய வாய்ப்பு உள்ளதாக நான் கருதுகிறேன் ...என்னதான் ஒரு குழந்தை தனியாக மிக செல்லமாக எந்த கஷ்டமும் இல்லாமல் வளர்ந்தாலும் ..பிற்காலத்தில்
என்றாவது ஒரு நாள் நமக்கு ஒரு உடன்பிறப்பு இருந்திருக்கலாமே என்று கண்டிப்பாக நினைக்கும் ...இப்பொழுது உள்ள நம் பிரச்சனைகள் .. நம் விருப்பங்களை நினைத்துக்கொண்டு ஒரு குழந்தையே போதும் என விட்டால் அதை நினைத்து பிற்காளத்தில் வருந்தப்போவது நாமே ...

Express Yourself .....

Ennaku oru baiyan irrukiran epothu 5 matha karpam, ithuvum onn Kulanthai thaan. ennaku megavummanakavalaiaga ullathu. pen kulanthai ethirparthen.pinnalil onn kulanthaigal otrumaiyaga irrukamatargal entrethondrugirathu, enn kanavarai mighavum kaztapattu samathika vaithu karpam tharithen. anal ithuvum onn kulanthai enbathal payamaga ullathu. oruvarukuruvar otrumaiyaga iruupargala engalayum parpargala theriyavillai.

onn kulanthai petra sakothirigal itharku bathil alikavum.ungal bathilai ethirparthirikiren.

ippadiku
Hema

என்னங்க இது இப்படி பயப்படுறீங்க..பின்னாளில் ஒற்றுமையா இருக்க வைக்க இப்பவே பேசி புரிய வைத்து ஒற்றுமையோடு இருக்கவைப்பது உங்க கைய்யிலும் இருக்கு...அதுவு...ஆனால் எங்களை கவனிப்பார்களா என்ற கேள்வி இன்று மாற்றப்பட்டுவிட்டது.
பிள்ளைகள் கவனிப்பை எதிர்பார்க்காமல் நமக்கான எல்லா சேமிப்பு மற்றும் இதர வசதிகளை இப்பவே செய்து வைத்து விடுவதும், எல்லாமே என் பிள்ளைக்கு என்று நாளை அதனை திரும்ப எதிர்பார்க்காமல் இன்றே நமக்கும் செய்து வைத்து விடுவது நல்லது

அது ஏன்பா எல்லா வீட்டுலயும் வீட்டுக்காரர் 2 வது குழந்தை வேண்டாம்னு சொல்றாங்க ..என் வீட்டுலயும் இதேதான் .. எனக்கு 4 வயதில் ஒரு பையன் .. என் வீட்டுக்காரர் அடுத்தது வேணாம்னு சொல்றாங்க ..எப்டி சம்மதிக்க வைக்குறதுன்னு தெரியல :(

Friends make Life Beautiful !!!

ஹேமா ஐந்து மாதம் தானே ஆகிறது ???. சந்தோசமாக இருக்கவேண்டிய தருணம் இது!!! :->அதற்குள் ஏன்பா இந்த கவலை ?? அது ஆண் குழந்தைதான் என்று எப்படி நினைகிறீர்கள்??? தாளிகா சொல்வது போல் நமகென்று சேமித்து வைத்து கொள்வது மிகவும் நன்று.அந்த சேமிப்பை மற்றவரிடம் தெரியபடுத்துவது கூட தேவை இல்லாதது என்று நினைக்கிறேன் .நம்மை நாமே பார்த்துக்கொள்ள வேண்டிய காலம் இது.ஆதலால் நாம் மற்றவரை எதிர்பார்க்கக்கூடாது என்று நினைக்கிறேன்...பையன்களை விட்டுகொடுத்து வாழ கற்று கொடுப்பது நம் கையில்தானே உள்ளது .பெரிய பையனிடம் நீதானே பாப்பாவை பார்த்துகொள்ள வேண்டும்,பாவம் சின்ன குழந்தை அவனுக்கு நீதானே விளையாட்டு காட்டனும்.இப்படிஎல்லாம் சொல்லித்தான் என் தோழி வளர்த்தாள்..;->

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

இரண்டு குழந்தைகள் இருந்தால் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து பழகும் எண்ணம் மேலோங்கும். என்னதான் அக்கம் பக்கம் குழந்தைகளுடன் பழகினாலும், உறவு குழந்தைகளிடம் பழகினாலும் நம் தங்கை, தம்பி என்று வரும்போது அவர்களின் எண்ணமே வேறாக தோன்றும். (முக்கியமாக அடிதடி).
அவர்களின் எண்ணங்களை வெளிப்படுத்த உடன்பிறந்தவர்கள் மிக அவசியம்.
சின்ன குழந்தையாக இருக்கும் போதும் சரி, வளர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு இணையாகவே நாம் விளையாடிக்கொன்டிருக்க முடியாது. வெளியிடங்களுக்கு செல்லும் போது குழந்தைகள் பேசிக்கொள்ளுவதை ரசிக்கமுடியும், நாமே சதா குழந்தையாக மாறி அவர்களுடன் ஒன்றிடமுடியாது.
இப்ப ஒரு ஊருக்கு செல்றோம், அப்பகார்லயோ பஸ்ஸிலோபோறோம்,குழந்தைங்க அவர்களுடன்பேசிக்கொண்டும்,விளையாடிக்கொண்டும்,சண்டையிட்டுக்கொண்டும் வருவார்கள், ஆனா பெற்றோர்களை அவர்களுக்கு இணையாக ஏற்றுக்கொள்வது என்பது இயலாத காரியம்.
நான் கல்லூரியில் படிக்கும் பொழுது அங்கிருந்த பெரும்பான்மையான விரிவுரையாளர்கள் வேலையை கருத்ஹ்டில் கொண்டு ஒரே குழந்தை மட்டுமே வைத்திருந்தனர். தற்சமயம் ஒரு விரிவுரையாளரின் வீட்டிற்கு சென்றோம், அப்பொழுது அந்தா மேம் மிற்கு உடல்நலக்குறைவு, அவருக்கு ஒரேயொரு பெண்குழந்தை மட்டுமே, இன்னும் திருமணம் ஆகவில்லை, தனியாளாக தன் தாயையும் கவனித்துக்கொண்டு கல்லூரிக்கும் சென்று மிகவும் சோர்ந்து போய் காணப்பட்டார். தன் கஷ்ட நஷ்டத்தை பங்கு போட்டுக்கொள்ள உடன் பிறந்தவ்ர் இல்லை என்ற ஏக்கத்தை வெகுவாக வெளிப்படுத்தினார்.
குழந்தை ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இரண்டு குழந்தைகள் இருந்தால் ஆரோக்கியமே!!

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மேலும் சில பதிவுகள்