நாம் இருவர் நமக்கு ஒருவர் - இது ஏற்றுக்கொள்ள கூடியதா? உங்கள் சாய்ஸ் எத்தனை குழந்தைகள்?

கடைசி இரண்டு வாக்கெடுப்பும் கொஞ்சம் சீரியஸ்ஸான வாக்கெடுப்பா இருந்ததால, இங்கே விவாதத்தில அனல் பறந்துச்சு. அடுத்தும் இன்னொரு ஹாட் டாபிக் கொடுக்கத்தான் ஆசை. இருந்தாலும் எப்போதும் விவாதம் சீரியஸ்ஸா இருந்தா போரடிச்சுடும்ங்கிறதால கொஞ்சம் காமெடி கலந்த டாபிக் இந்த முறை வாக்கெடுப்பிற்கு வந்திருக்கு. அதற்காக இதை ரொம்ப காமெடி மேட்டரா நெனைச்சிட வேண்டாம். இதுவும் ஒரு வகையில சீரியஸ்ஸான மேட்டர்தான். ஆனா, விவாதத்தில அனல் இருக்காது. நிறைய காமெடி இருக்கும்ணு நம்புறேன்.

கொஞ்ச நாளைக்கு முன்னே, இது சம்பந்தமா ஒரு விவாதம் மன்றத்துல நடந்துச்சு. அதை வச்சி வந்ததுதான் இந்த வாக்கெடுப்பு. சிலர் கருத்து சொல்றப்ப, குழந்தைகள் குறைவா இருந்தா அடுத்த தலைமுறையில உறவுகள் இல்லாம போயிடும்னு வருத்தப்பட்டாங்க. இது எந்த வகையில சரியானதுன்னு எனக்கு தெரியல. இரத்த சொந்தங்கள் மட்டும்தான் நமக்கு சொந்தம்னு இன்னமும் நாம ஒரு சின்ன வட்டத்துக்குள்ள வாழறோம் அல்லது வாழ விரும்புறோம்ங்கிறதை இந்த கருத்து சொல்ற மாதிரி எனக்குள்ள ஒரு உணர்வு.

இதுக்கு நீங்க என்ன சொல்றீங்க..? வழக்கம்போல விவாதத்தை தொடங்குங்க. (தனிப்பட்ட யாரையும் தாக்காம..)

பி.கு: அதிகக் குழந்தைகள் வேண்டும் என்று வலியுறுத்தும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள், அந்நாட்டினவராய் இல்லாது, இந்தியராய் மாறி இந்த விவாதத்தில் கலந்து கொள்ளவும். இந்திய சூழ்நிலையை மனதில் வைத்து வாக்கு கொடுங்கள். கருத்து தெரிவியுங்கள்.

இப்ப நிறைய பேர் வீட்டில் ஒரே குழந்தையாக இருக்கு. இன்னொன்னு வேணாமான்னு கேட்டா, எல்லாம் இந்த ஒரு குழந்தையை ஆளாக்கினாலே போதும் அப்படிங்கறாங்க. குழந்தைக்கு அண்ணன், அக்கா, தம்பி, தங்கச்சி இப்படி உறவுகள் வேணும் அப்படின்னு சொன்னா, பெரியப்பா, சித்தி வீட்டுக் குழந்தைகள் இருக்காங்க, அவங்களே போதும்கறாங்க.

சரி, இப்ப இந்தக் குழந்தைகளுக்கு பெரியப்பா பொண்ணு, சித்தி பையன் இருப்பதற்குக் காரணம், பெற்றோருக்குக் கூடப் பிறந்தவங்க இருப்பதால்தானே. இவங்க குழந்தைக்கு ஒரு குழந்தை பிறக்கறப்ப, இந்த மாதிரி உறவுகள் அடுத்த ஜெனரேஷனுக்கு இருக்குமா?

அண்ணி, அண்ணமுண்டி, மன்னி, மதினி, வதனை, மச்சான், அத்திம்பேர், அத்தங்கா, அம்மாஞ்சி, மச்சினர் பெண்டாட்டி,கொழுந்தன் பெண்டாட்டி, கொழுந்தன், நாத்தனார், நாத்தி, ஓர்ப்படியா, ஓரகத்தி, பெரியப்பா, சித்தப்பா, சித்தி, சித்தப்பா, அத்தை, மாமா - இந்த மாதிரி உறவு முறை வார்த்தைகளெல்லாம் காலப் போக்கில் இருக்குமா இருக்காதான்னு பயமா இருக்கு.

அது சரி - காலம் போற போக்கில் ‘லிவிங் டு கெதர்’ கலாச்சாரம் வந்துட்டு இருக்கறப்ப - கணவன், மனைவி, அம்மா, அப்பா இந்த வார்த்தைகளும் உறவு முறைகளும் நிலைச்சிருந்தாலே போதும்னு நினைக்க வேண்டியிருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

எனக்கு... ஒன்பதாக இருந்தாலும் ஓகே. கலகலன்னு வீடும் ஸ்கூல் போல இருக்கும். ;)
இப்போவெல்லாம் ஒன்று கிடைப்பதே பெரும்பாடாக இருக்கிறது பலருக்கு. இது பேராசை!

'என் பிள்ளைக்குக் கிடைக்காது எல்லாம் என் பிள்ளைக்குக் கிடைக்க வேண்டும்.' அவர்கள் சிறு வயசு ஆசைகளையெல்லாம் பிள்ளைகள் மூலம் தீர்த்துக் கொள்ள நினைக்கிறாங்க பெற்றோர். அதனால் ஒரு குழந்தை இருந்தால் வசதி என்பது உண்மை. இருந்தாலும் அவங்களுக்கு கிடைச்ச முக்கியமான ஒன்று குழந்தைகளுக்குக் கிடைக்கப் போவது இல்லை. சகோதர பாசம்.

அது இல்லாம, வருடங்கள் ஓட மனசு கொஞ்சம் மெஷினாகிரும் எல்லாருக்கும் என்கிற ஒரு அபிப்பிராயம் இருக்கு எனக்கு. எந்த விடயமும் வீட்டில்தான் முதலில் கற்க ஆரம்பிக்கிறோம். பகிர்ந்து கொள்வதுவும் அப்படித்தான்.

யாராவது சைனீஸ் குட்டீஸைக் கண்டால் பிடித்துப் பேச்சுக் கொடுக்க வேண்டும். அவர்கள் அபிப்பிராயத்தை அறிந்துகொண்டு திரும்ப இந்த இழைக்கு வருகிறேன். அது எப்போது என்கிறது மட்டும் தெரியாது. ;)

சீதா... ;) சூப்பர்! எது மறைந்து போனாலும் 'அம்மா' என்கிற வார்த்தை மட்டும் நிலைத்து நிற்கும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்