இனிப்பு சேமியா(குழந்தைகளுக்கு)

தேதி: October 14, 2007

பரிமாறும் அளவு: மூன்று நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

சேமியா - ஒரு டம்ளர்
சர்க்கரை - முக்கால் டம்ளர்
ஏலம் - இரண்டு
ரெட் கலர் - ஒரு பின்ச்
பட்டை - ஒரு சிறிய துண்டு
லவங்கம் - ஒன்று
முந்திரி, கிஸ்மிஸ் பழம் - தலா ஒரு மேசைக்கரண்டி
உப்பு - ஒரு பின்ச்
தண்ணீர் - இரண்டு டம்ளர்
நெய் - மூன்று டீஸ்பூன்

ஒரு டீஸ்பூன் நெய்யை ஊற்றி சேமியாவை லேசாக சிவக்க வறுத்தெடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் இரண்டு டீஸ்பூன் நெய்யை ஊற்றி காய வைத்து முந்திரி, கிஸ்மிஸ் பழத்தை வறுத்து எடுத்து விட்டு அதே பாத்திரத்தில் பட்டை, ஏலம், லவங்கம், உப்பு போட்டு தண்ணீரை ஊற்ற வேண்டும்..
ஊற்றி கலர் பொடியை கலந்து ஊற்றவும், ஊற்றி கொதி வந்ததும் வறுத்து வைத்த சேமியாவை கொட்டி கிளறி கடைசியில் வறுத்து வைத்த முந்திரி, கிஸ்மிஸ் பழத்தை கொட்டி இறக்கவும்

இது குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுத்து அனுப்பலாம்

மேலும் சில குறிப்புகள்

Comments

ஹலோ, ஜலீலா மேடம் இதில் சீனி எப்போது சேர்க்கவேண்டும் என்று சொல்லவில்லை. நான் சேமியா வெந்தவுடன் சேர்த்தேன். இன்று children`s day என்பதால் குழந்தைகளுக்கு lunchbox-ல் செய்து கொடுத்தேன் . மிகவும் நன்றாக இருந்தது என்று என் மகள் thanks கூற சொன்னாள். மிகவும் நன்றி.

அன்பு தோழிகளே,

சாரிபா விஜிமலை இனிப்பு சேமியா நீங்கள் இதை செய்து பார்த்தது நல்லதா போச்சு இதில் உள்ள பிழையையும் திரித்தி விடலம்.
சேமியா போட்டு சிறிது வெந்தததும் சேர்க்கனும் சற்று இளகளாக வரும் பிறகு ஆறியதும் செட் ஆகிவிடும். நானும் குழந்தைகளுக்கு பள்ளிக்கு தான் கொடுத்து அனுப்புவேன்.உங்கள் மகளுக்கு என் பெயரை சொல்லி ஒரு சாக்லேட் வாங்கி கொடுங்கள்.
ஜலீலா

Jaleelakamal