கிரீம் ஆஃப் டொமேட்டோ சூப்

தேதி: October 14, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தக்காளி - பெங்களூர் தக்காளி ஐந்து (இரண்டாக நறுக்கியது)
பீட்ரூட் - ஒன்று துருவியது
பட்டை, ஏலம், கிராம்பு - தலா இரண்டிரண்டு
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கியது)
பூண்டு - ஐந்து பல்
முழு மிளகு - ஒரு தேக்கரண்டி
வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
ஒயிட் சாஸ் - அரை கப்
செலரி - சிறிது
ஒயிட் சாஸ் - நான்கு மேசைக்கரண்டி
ஒயிட் சாஸ் தயாரிக்க:
வெண்ணெய்- ஐம்பது கிராம்
மைதா (அ) சோள மாவு - ஒரு கப்
பால் - இரண்டு கப்
உப்பு - ஒரு டீஸ்பூன்
மிளகு தூள் - இரண்டு டீஸ்பூன்


 

வெண்ணெயை உருக்கி பூண்டு, முழு மிளகு பட்டை, ஏலம், கிராம்பு, பீட்ரூட், செலரி போன்றவைகளை ஒவ்வொன்றாக போட்டு வதக்கி பின் வெங்காயத்தை வதக்கி சுருண்டவுடன் தக்காளியை போட்டு வதக்கவும். தோல் சுருங்கியவுடன் தக்காளி மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி குக்கரி இரண்டு விசில் விட்டு இறக்கி ஆற விடவும்.
ஆறியதும் ஜீஸ் எடுக்கும் கருவியில் (அ) கையால் பிசைந்து (அ) கரண்டியால் மசித்து பெரிய வடிகட்டி கொண்டு வடிகட்டவும்.
மொத்தமாக செய்து வைத்திருக்கும் ஒயிட் சாஸிலிருந்து நான்கு மேசைக்கரண்டி போட்டு வடிகட்டி வைத்து இருக்கும் தக்காளி சாறில் கலக்கவும்.
இப்போது செய்து வைத்திருக்கும் சூப் ரொம்ப கட்டியாக இருந்தால் சூப் பதத்திற்கு தண்ணீர் சேர்த்து உப்பு,மிளகு தூள் தூவி சூடான கட்லெட்டுடன் குடிக்கவும்.
ஒயிட் சாஸ் தயாரிக்கும் முறை:
ஒரு கனமான பாத்திரத்தில் வெண்ணெயை உருக்கவும் லேசாக உருகிக் கொண்டிருக்கும் போது மைதா (அ) சோளமாவை சிறிது சிறிதாக போட்டு வறுக்கவும். பின் பாலை ஊற்றி கை விடாமல் கிளறவும்.
ஒயிட் சாஸ் ரெடி.


ஒயிட் சாஸ் செய்து கலப்பதினால் சூப் திக்காக இருக்கும் ஒரு ரிச்சான டேஸ்ட் கிடைக்கும். ஒயிட் சாஸை இரண்டு மூன்று நாள் முன்பே கூட தயாரிக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

க்ரீம் செய்யும் பொழுது அது கொஞ்சம் கெட்டி ஆகி விட்டது - பால் கோவா போல் - சூப் செய்வதகுள் கொஞ்சம் இறுகி விட்டது. அதனால் சூப்பில் சரியாக கரைய வில்லை. white sauce எந்த பதத்தில் இறக்க வேண்டும்?

வொயீட் சாஸ் கட்டியும் ஆகாமல் தண்ணீரும் ஆகாமல் தயிர் பதத்திற்கு இருக்கனும் . கிளற கிளற இன்னும் இருகும்.அதான் டொமேடோவில் தண்ணிர் நிறைய இருக்கே இரண்டு சேரும் போது சரியாக வரும்.
வொயிட் சாஸ் சூப் செய்யும் போது தீயை கம்மியாக வைத்து விட்டு தான் சாஸ்களை சேர்க்கனும்,அதே மதிரி சிக்கன் சூப்பிலும் முட்டையெல்லம் சேர்க்கும் போது மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கனும். வொயிட் சாஸ் கட்டியான சூப்பில் வேண்டுமானால் இராண்டு டம்ளர் வெது வெதுப்பான தண்ணீர் சேர்த்து மெதுவாக கிளறி தண்ணிர் பதத்திற்கு கொண்டு வாங்க இல்லை என்றால் இரண்டு தக்காளி இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவைத்து வடிகட்டி சேருங்கள்.
வொயிட் சாஸ் மொத்தமா செய்து விட்டு இரண்டு குழி கரண்டி அளவு போட்டால் போதும்.தேவை பட்டால் கூட சேருங்கள் மீதியை பிரீஜரில் வைத்து விடுங்கள்.
சாஸ் சேர்க்கும் போது கவனமாகா சேர்க்கவும்.
கொஞ்சம் நிறைய ஆனாலும் பரவா இல்லை முன்று நாட்களுக்கு வைத்து குடிக்கலாம்.
ஜலீலா

Jaleelakamal

வொயிட் சாஸ் தயாரிக்கும் விதம் குறிப்பிட்டு இர்ந்தேன், மேலே அலவில் அரைகப் என்று இருக்கே அதை நீங்கள் கவனிக்கவில்லையா, மொத்தமாக வொயிட் சாஸ் தயாரிக்கும் அளவு நீங்கள் செய்து பீரிஜரில் வைத்து கொண்டால் தேவையான போது சூப் செய்யும் போது பயன் படுத்தலாம்.
நீனகள் புதியதாக இப்பதான் சூ செய்கீஇகள் என்றால் ஒன்று பண்ணுங்க பால்,தண்ணி, சோளமாவு, எல்லம் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள் பட்டரை உருக்கி அது உருகுவதற்குள் இதை ஊற்றி கை விடாமல் கிளறவும்.
ஜலீலா

Jaleelakamal

எனக்கு சூப் liquida இல்லாமல் semi solid stateil வந்து விட்டது.வெறுத்து போய் விட்டேன்.
சரி ஜலீலா அடுத்த முறை நீங்கள் சொல்வது போல் செய்து பார்கிறேன்.பிரிட்ஜில் வைட் சாசை வைத்தால் இறுகி விடாதா?

இப்ப தக்காளி சூப் அதிகமாக இருந்தால் அதை பிரிட்ஜில் வைத்து முன்று நாளைக்கு குடிகசொன்னேன்,
வெயிட் சாஸ் அதிகமாக இருந்தால் அதை உடனே பீரீஜரில் வைத்து அடுத்த முறை சூப் செய்யும் போது பத்து பதினைந்து நிமிடம் முன்பாக எடுத்து வெளியில் வைத்து மெல்ட் ஆனதும் உபயோகபடுத்தவும்.ஒகேவா. புரிந்ததா.
ஜலீலா

Jaleelakamal

im very surprised 2 see ur recipes.

epadi samayalil ivlo periya puliya irukinga?

nan eppavume unga recipes particular a parpen.

unga grandma melappalayam a enna?

most of the items unga menu la enga ooru recipes than,i like it very much madam.

டியர் நுவைஸ் இத இப்ப தான் பார்த்தேன்,
ஆமாம் எங்க கிரான் மா மேலபாளையம் தான்.
ரொம்ப நன்றி என் ரெஸிபியை சமைப்பதற்கு,
நோன்பு என்பதால் ஒரு நாளக்கு கஞ்சி, சூப் என்று நேறு பாலக் கீரை சூப் போட்டாச்சு, இன்று கிரீம் ஆப் சிக்கன் சூப், நாளைக்குஇத போடலாம் என்று சும்ம பார்க்க வந்ஹ்டேன் உங்கள் மெஸேஜ்.
ஜலீலா .

Jaleelakamal