கோதுமை மாவு முட்டை தோசை

தேதி: October 14, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை மாவு 1 கப்
முட்டை - 1
உப்பு - சுவைக்கு


 

கோதுமை மாவை நீர் + உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
கரைத்த கோதுமை மாவில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து மாவை ஊற்றி பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.
இம்முறையில் சுடும் தோசையானது மிக மிக மென்மையாக இருக்கும்.
தொட்டுக்கொள்ள இட்லிப்பொடி அல்லது கார சட்னி பொருத்தமாக இருக்கும்.


தேவையெனில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து செய்யலாம். அப்பொழுது இட்லி பொடி அல்லது சட்னி தேவை இருக்காது.

மேலும் மாவை முன்கூட்டியே கரைத்து வைக்கவில்லையே என்று கவலைப்படவேண்டாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

கோதுமை முட்டை தோசை ..சுவையாக இருந்தது..நான் வாசத்திர்காக கொஞ்சம் இஞ்சி பொடிதாக நறுக்கி சேர்த்தேன் ..நன்றி..

வாழு, வாழவிடு..