தயிர் சாதம் (ஈஸி முறை)

தேதி: October 15, 2007

பரிமாறும் அளவு: நான்கு நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அரிசி - ஒன்றரை கப்
தயிர் - ஒரு கப்
பால் - மூன்று கப்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - மூன்று தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - மூன்று
முந்திரி, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, வேர்கடலை - தலா ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பச்சை மிளகாய் - ஒன்று
இஞ்சி,கொத்தமல்லி - கொஞ்சம் மேலே தூவ


 

சாதத்தை கொஞ்சம் குழைய வடித்து கொள்ளவும், வடித்த சூட்டோடு ஒரு கரண்டி கொண்டு நசுக்கவும்.
எண்ணெயை காய வைத்து தாளிக்க வேண்டிய அனைத்து பொருட்களையும் போட்டு தாளித்து தயிரை கலக்கி ஊற்றி உடனே பாலையும் ஊற்றி இறக்கவும். இறக்கி சாதத்தில் கொட்டி நன்றாக கிளறி கொத்தமல்லி, பொடியாக நறுக்கிய இஞ்சி தூவி இறக்கவும்.


தயிர் சாதத்திற்கு தொட்டுகொள்ள பீஃப் ஃப்ரை நல்லா இருக்கும். பீஃப் ரொம்ப சூடு, தயிர் சாதம் குளுமை. இரண்டிற்கும் நல்ல பொருத்தம். வெஜிடேரியனாக இருந்தால் மசால் வடை, கேரட் பொரியல் (அ) பீட்ரூட் பொரியல் செய்து சாப்பிடவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஜலீலாக்க, தயிர் சாதம் செய்து சாப்பிட்டேன். நன்றாக இருந்தது. ஆனால் முந்திரி, வேர் கடலை சேர்க்கவில்லை. மௌமுஅரி சேய்ய்யும் போது அதையும் சேர்த்து பார்த்து பின்னுட்டம் அனுப்புகிரேன்.
இது ரேண்டும் தான் கிரிடிகல் பாயிண்டு என்று நினிஅக்கிரேன். ஆனால் என்ன செய்ய தேடினேன் தெடினேன் கிடைக்கவில்லை. பசி வேற, டைம் வேற கடந்துகிட்டே இருக்கு. சரி நேத்து நைட் பார்த்தத நாபகம் வச்சு செய்யலாம் என்று செய்தேன். (”அதுக்குதான் எதையும் பிலான் பன்னி செய்யனும்”-போக்கிரி வடிவேல் ஸ்டைல்)
எங்க வீட்டில் அம்மா சேய்யும் போது பால் சேர்க்க மாட்டார்கள்.
அருசுவை மூலம் தான் தெரிந்துகொண்டேன்.

இனி செய்ய நினைக்கும் குறிப்புகளை பர்ர்க்கும் போதெ ஹிண்ட் எடுதுகொள்ள வேண்டும். ஸிஸ்டத்த ஓபென் பன்னி வச்சிகிட்டு தேடி செய்ற முறை வேலைக்கு ஆஹாது இனிமே.

(ஊப்ஸ், arusuvai.com, necessary evil)

இப்படிக்கு
இந்திரா

indira

டியர் இந்திரா தயிர் சாதம் பின்னூட்டத்துக்கு நன்றி இந்த முறையில் செய்தால் புளிப்பு தன்மை இருக்காது. குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.
ஜலீலா

Jaleelakamal