கோழிக்கறி வெள்ளை குருமா

தேதி: October 15, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

கோழிக்கறி - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 4
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
முந்திரி - 10
மிளகு தூள் - 2 தேக்கரண்டி
தனியா தூள் - 3 தேக்கரண்டி
கெட்டியான தேங்காய் பால் - 2 கப்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 ஸ்பூன்


 

கோழியை பெரிய துண்டுகளாக வெட்டி, சுத்தம் செய்யவும். தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும். முந்திரியை நைசாக அரைத்து வைக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை போடவும்.
பிறகு நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். அத்துடன் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
நல்ல வாசனை வந்தவுடன் கோழிக்கறி சேர்த்து வதக்கவும்.
கோழிக்கறி நன்கு வதங்கிய பின்னர் மிளகு தூள், தனியா தூள், உப்பு சேர்த்து கிளறவும். ஒரு கப் தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்.
கோழிக்கறி முக்கால் பதம் வெந்ததும் தேங்காய் பால் சேர்த்து நன்கு வேக விடவும்.
கோழிக்கறி முழுவதும் வெந்த பின் அரைத்த முந்திரி சேர்த்து கலக்கி உடனே இறக்கவும்.
அதன் மீது வறுத்த முந்திரி தூவி சூடாக பரிமாறவும். சுவையான ஒயிட் சிக்கன் குருமா தயார். நெய் சோறு, புலாவ், சாதம் போன்றவற்றிற்கு வெகு பொருத்தமாக இருக்கும்.
அறுசுவையில் 200 க்கும் அதிகமான குறிப்புகள் வழங்கி, மன்றத்தில் ஏராளமான பயனுள்ள குறிப்புகளையும் கொடுத்து வரும் திருமதி. செந்தமிழ்ச்செல்வி அவர்கள் சமையலில் 28 வருடங்கள் அனுபவம் உடையவர். சைவம், அசைவம் என இரண்டிலும் அசத்தக்கூடியவர். இன்னும் ஏராளமான குறிப்புகளை அறுசுவை நேயர்களுக்கு வழங்கவிருக்கின்றார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

செல்வி மேடம் உங்கள் குறிப்பை பார்க்கும் போது செய்து பார்க்க ஆசை,மேலும் உங்கள் போட்டோவை முதல் முதலாக பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி!அண்ணன்சொன்னது உண்மை தான் எங்களுக்கெல்லாம் இன்ப அதிர்ச்சி தான்!நான் கர்ப்பனை செய்தது போல் இல்லை,இளமையாக இருக்குறீர்கள்!

selvi madam இது எப்ப எடுத்த photo?
receipe also super saranyamohan

saranyamohan

கற்பனையில் ஒரு செல்வி, குரல் கேட்டபோது ஒரு செல்வி, நிழற்படத்தில் ஒரு செல்வி, ஆனால் எல்லா செல்வியுமே அழகு தான்.
அன்புடன்
ஜெயந்தி

எல்லாமே ஸ்டைலா அழகா இருக்கு அக்கா.

வாழ்த்துக்கள்.

செல்வி மேடம் நீங்களா அது நிஜம்மா நம்பவேமுடியவில்லை இது எங்களுக்குயெல்லாம் ஒரு பெரிய இன்ப அதிர்ச்சிதான்...உங்கள் அனுபவங்களை வைத்து நான் கற்பனை பண்ணிவைத்த செல்வி மேடம் வேறு ஆழகாக இருக்கிறீர்கள் ...உங்கள் இளமையின் ரகசியம் என்னவோ எங்களுக்கும் சொல்லுங்களேன்

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

அன்பு சகோதரி ரசியா,
நலமா? கண்டிப்பாக குறிப்பை செய்து பாருங்கள், மிகவும் அருமையாக இருக்கும். உங்கள் கற்பனையில் நான் எப்படி இருந்தேன்னு சொல்லாம விட்டுட்டீங்களே! என் போட்டோவை பார்த்ததே மகிழ்ச்சி என்று சொல்லும் உங்களை நேரில் பார்க்க நான் ஆவலாக உள்ளேன். உங்களுடைய பாராட்டுக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்புள்ள செல்வி மேடம் அவர்களுக்கு,
நலமாக இருக்கிறீர்களா. மேடம் உங்களுடைய கோழிகறி வெள்ளை குருமாவை பார்க்கும் போதே செய்து சாப்பிடனும் போல் இருக்கிறது. அப்புறம் மேடம் நான் முதலில் உங்கள் குறிப்புகளை செய்து பார்த்து உங்களுடன் உரையாடும் போது உங்களை ஒரு 30 வயது இருக்கும் என்று தான் நினைப்பேன் அப்புறம் உங்கள் சமயல் அனுபவம் 28 வருடம் என்றதும் உங்கள் அனுபவத்தைவைத்து நான் கற்பனை பண்ணி வைத்து இருந்த செல்வி மேடத்திற்க்கும் இப்ப போட்டோவில் இருக்கும் செல்வி மேடத்தை பார்த்ததும் அசந்துவிட்டேன் எப்படி மேடம் உங்கள் பொண்ணுக்கு அக்கா மாதிரி இருக்கீங்க எப்பவும் இதே போல் இருக்க என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனை.
அன்புடன் கதீஜா

அன்பு சகோதரி சரண்யா,
நலமா? சத்தியமா அது சமீபமா எடுத்த போட்டோதான். குறிப்பை பாராட்டியதற்கு மிக்க நன்றிம்மா.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹெலொ செல்வி மேடம்,
உங்க போட்டோ பார்த்ததும் பிரம்மித்து விட்டேன். நான் உங்களை கே ர் விஜயா மாதிரி கற்பனை பண்ணி வைத்திருந்தேன். உங்களுடைய நகைச்சுவை கலந்த பேச்சும் உங்கள் குறிப்பும் நன்றாக ரசிப்பேன். என்னை உங்களுக்கு தெரியாது. ஆனால் எப்போதும் உங்கள் அரட்டையை ரசிக்கும் தங்கை
மாஜிதா சுபைர்

majithazubair

அன்பு சகோதரி ஜெ,
நலமா? உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. ஆனா எல்லா செல்வியும் ஒன்றுதான்.(நேரில் பார்க்கப் போகும் செல்வியையும் சேர்த்து)
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்பு சகோதரி பர்வீன்,
நலமா? பாராட்டுக்கு நன்றி.குறிப்பு அழகா மட்டும் இல்லை, சுவையாகவும் இருக்கும். செய்து பாருங்கள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்பு சகோதரி கதீஜா,
நான் நலமே. நீங்க நலமா? ரம்ஜான் எப்படி போயிற்று? உங்க வாழ்த்துக்கும், பிரார்த்தனைக்கும் மிக்க நன்றி. ரொம்ப சின்ன வயசிலய திருமணம் ஆனதால் சமையல் அனுபவம் அதிகமாகி விட்டது. உண்மைதான், என்னைப் பொருத்தவரை நான் 30 வயதை தாண்டியதே இல்லை.(மனதால்)அதுதான் நான் இப்படி இருக்க காரணமோ,என்னவோ. கண்டிப்பாக குறிப்பை செய்டு பார்த்து எப்படியிருக்கிறது என்று சொல்லுங்கள்.மிக்க நன்றி. மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்பு சகோதரி மாஜிதா,
நலமா? நல்லவேளை! நீங்களாவது கே.ஆர்.விஜயா ரேஞ்சுக்கு கற்பனை பண்ணியிருந்தீங்க, நம்ம அட்மின் என்னை கமலாகாமேஷ் ரேஞ்சுல இல்ல கற்பனை பண்ணி வைச்சிருந்தாராம். உங்கள் ரசனைக்கு நன்றி. முன்பே தெரியாட்டா என்ன், இப்ப தெரிஞ்சுகிட்டா போச்சு! நகைச்சுவை பேச்சு எங்க மண்ணுக்கே உரித்தானது.
மீண்டும் சந்திப்போம். நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்பு சகோதரி ஜுலைகா,
நலமா? அது நானேதான். இளமைக்கு ரகசியம் எதுவும் இல்ல. என் மனசைப் பொருத்தவரை எனக்கு வயசானதா நினைக்கவே மாட்டேன், அவ்வளவுதான். அனுபவம் சிறுவயதிலேயே நிறைய கிடைத்து விட்டது. மனிதர்களால் ஒருபுறம், கடவுளால் ஒருபுறம் (இருந்தால்). உங்கள் அன்புக்கு நன்றி. மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹாய் செல்வி! சாரி மேடம்! உங்க ஃபோட்டோவைப் பார்த்தால் அப்படிதான் அழைக்கத் தோன்றுகிறது :-)

//என்னைப் பொருத்தவரை நான் 30 வயதை தாண்டியதே இல்லை.(மனதால்)//

என்றும் முப்பதாகவே இருக்க என் வாழ்த்துக்கள்!

அன்பு சகோதரி அஸ்மா,
நலமா? ரம்ஜான் நன்றாக போயிற்றா? உங்கள் வாழ்த்துக்கு நன்றி. நீங்கள் தாராளமாக செல்வி என்றே அழைக்கலாம்.
கண்ணீரால் கரைந்து கொண்டுள்ளேன், உங்கள் அனைவரின் அன்பில். என்மேலும் அன்பு செலுத்த இத்தனை பேர் இருக்கிறார்களான்னு நினைக்கும் போது என் உள்ளம் உருகுகிறது.கூடப்பிறந்த சகோதரிகள் இருவர் இருந்தும் இல்லாத நிலையில், உலகெங்கும் எனக்கு இத்தனை சகோதரிகளும், மகள்களுமா என நினைக்கும் போது சந்தோஷத்தில் மூச்சடைக்கிறது.
உங்களின் கவிதை படித்தேன். அற்புதம், அருமையான கருத்துக்கள். அங்கேயே பாராட்ட நினைத்தேன். இங்கெல்லாம் பதில் கொடுத்து வருவதற்குள் நீங்க இங்க வந்துட்டீங்க. நிறைய எழுதுங்கள்.வாழ்த்துக்கள்.
நன்றிகள் ஆயிரம்.
அன்புடன்,
செல்வி

அன்புடன்,
செல்வி.

செல்வி அக்கா அவர்களுக்கு,

உங்களுடன் நான் பேசியது இல்லை ஆனால் உங்கள் குறிப்புகள் நிறய செய்து இருக்கிரேன். உங்கள் பதிவுகளும் படித்து ரசித்து இருக்கிரேன். நானும் உங்களை சிறிது வயதானவராக தான் கற்பனை செய்து இருந்தேன். ஆனால் உஙகளை பார்ததும் மிகவும் ஆச்சர்யம் அடைந்தேன். நீங்கள் மிகவும் அழகாக இருக்கின்ரீர்கள். பக்கத்து வீட்டு பெண் என்று சொல்வோம் இல்லயா அது போல் ஒரு அழகான ஒரு அக்கா எஙகளுக்கு அருசுவையில் கிடைத்து இருக்கின்றீர்கள். உங்கள் கணவரிடம் சொல்லுஙகள் அவர் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று :) அழகான அன்பான அருமையாக சமைக்க தெரிந்த மனைவி மற்றும் நல்ல தோழி அவருக்கு கிடைத்ததற்கு :)

நீஙகள் இன்று போல் இதே இளமையுடனும் மனதில் சந்தோஷமுடனும் இருக்க என் ப்ரார்த்தனைகள் & வாழத்துக்கள். யாரையவது திருஷ்டி சுத்தி போட சொல்லுஙகள் என் கண்ணே பட்டு விட போகிறது :)

அன்புடன் உமா :)

அன்புடன் செல்வியக்காவிற்கு,
இன்ப அதிர்ச்சி கொடுத்திட்டீங்க:-)) உங்கள் எழுத்துக்களை வைத்து உங்களின் வயதை கூடவே மதிப்பிட்டிருந்தேன்.படத்தைப் பார்த்ததும் (இன்ப)அதிர்ச்சிதான்!!!!
அதனால்த்தான் என்னவோ அதிர்ச்சி வைத்தியம் வேண்டாம்னு யாருமே தங்களது படங்களைக் கொடுக்கலையோ?

செல்வி மேடம்
நிஜமாகவே நீங்க மேடம் தான் யு ஆர் வெரி கிரேட்
நம்பவே முடியவில்லை வில்லை வில்லை.............
இங்கு அருசுவையில் ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு மாதிரி அழைப்பேன் ஆனால் முதலிலிருந்தே நான் உங்களை செல்வி மேடம் என்று தான் அழைக்கிறேன் அதை ப்ருஃப் பண்ணி விட்டீர்கள்.
ஜலீலா

Jaleelakamal

அன்பு தங்கை உமா,
எப்படியிருக்கீங்க? உங்க கூட பேசினதில்லையென்றாலும் பதிவுகளில் உங்கள பாத்திருக்கேன். உங்க பேர்ல எனக்கொரு தங்கை இருக்கறதால உங்களுக்கு அப்டி தோன்றியிருக்குமென நினைக்கிறேன். எனக்கும் என கணவருக்குமிடையே பெரிய சண்டையே நடக்கும் 'யார் அதிர்ஷடசாலி'ன்னு. அது நான் தான்னு சொல்லுவேன், அவரும் அவர்தான்னு சொல்வாரு(!).
உங்கள் ப்ரார்த்தனைகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். சகோதரிகளோட கண்ணெல்லாம் படவே படாது. :-)
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்பு தங்கை ஷாந்தா,
எப்படியிருக்கீங்க? என் எழுத்துக்கள் என் அனுபவத்தால வந்தது. இன்ப அதிர்ச்சியா நீங்க எடுத்திட்டா எனக்கு சந்தோஷம் தான்.
மத்தவங்க ஏன் படத்த கொடுக்க தயங்கறாங்கன்னு தெரியல. சுபா சொன்ன மாதிரி தெரிஞ்சவங்க யாராவது பாத்து போட்டுக் கொடுத்துட்டா என்ன பண்றது. நானும் இவ்வளவு நாள் முகங்காட்ட பயந்தது உண்மைதான். என் கணவர் கொடுத்த தைரியத்தால் தான் துணிஞ்சு ஃபோட்டோ கொடுத்தேன். ஒக்கே, மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்பு சகோதரி ஜலீலா,
நலமா? ஆமா எந்த மலை மேல இருக்கீங்க? பயங்கரமா எதிரொலிக்குது! எல்லாம் சொன்ன நீங்க குறிப்பு எப்படி சொல்லவேயில்லயே?
நீங்க செய்து பார்த்துட்டு சொன்னா இன்னும் சந்தோஷமாயிருக்கும்.
நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

டியர் செல்வி மேடம்
எனக்கு இன்று என்ன தேவை வித்தியாசம செய்யனுமா அதை மட்டு தேடுவேன்,அதுவும் இல்லாமல் டயம் இல்லை இந்த டரை பண்ணுவது உடனே பண்ண்மாட்டே. காலியில் ஆறிலிருந்து எட்டுக்குள் வேலை முடியனும். ஈதுக்கு பிறகு இன்னும் கடைக்கு போகவில்லி இருப்பதை வைத்து ஓட்டி கொண்டிருக்கிறேன், உங்கள் கோழி குருமாவில் தக்காளி இல்லை கண்டிப்பாக செய்டு பார்த்து விடு சொல்கிறேன். என் பையனுக்கு தக்காளி போட்டாலே பிடிக்கது. கூடுமன வரை நல்ல வதக்குவேன் இல்லை அரித்து ஊற்றுவேன்.
ஜலீலா

Jaleelakamal

அன்பு சகோதரி செல்வி மேடம் அவர்களுக்கு

எப்படி இருக்கிறீர்கள் ?.....உங்கள் உடல் நிலை இப்போ எப்படி உள்ளது..... நானும் இதே போலதான் கோழி குருமா செய்வேன் ஆனால் தேங்காய்பாலுக்கு பதில் தயிர் ஊற்றுவேன் அது என் குறிப்பில் உள்ளது ...இன்று சிக்கம் வெள்ளை குருமா செய்து பார்த்தேன் நன்றாக இருந்தது நன்றி

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

செல்வி அக்கா, உங்க புகைபடத்தை பார்த்து அசந்துட்டேன்.நிஜமாவே இன்ப அதிர்ச்சி தான்.உங்க சமையல் அனுபவம்,பேச்சில் இருக்கும் பக்குவம் இதை பார்த்து கொஞ்சம் பெரியவங்களா கற்பனை பண்ணியிருந்தேன்.உங்க குறிப்புகளை நான் அடிக்கடி செய்வேன்.உங்க குறிப்பும் அழகு.நீங்களும் அழகு.
உங்க இட்லி குறிப்புபடி தான் இட்லி சுடறேன்.சாஃட்டா இருக்கு

அன்புடன்
திவ்யா அருண்

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

அன்பு சகோதரி ஜுலைகா,
நான் நலமே. நீங்கள் எப்படியிருக்கீங்க?
மன்னிக்கவும். உங்கள் குறிப்பில் கோழி குருமாவை நான் பார்க்கத் தவறி விட்டேன். இருப்பினும் எனது குறிப்பை செய்து பார்த்தமைக்காக நன்றி. தங்களின் பாராட்டுக்கும் நன்றி. சந்திப்போம்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹாய் திவ்யா,
எப்படியிருக்கே? நான் அன்னைக்கே உங்களுக்கு பதில் கொடுத்தேன், எப்படி பதிவாகாம போனதுன்னு தெரியல.
உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி. என்னுடைய குறிப்புகளை செய்து பார்ப்பதற்காக மிகவும் மகிழ்ச்சி.
இட்லிக்கு குறிப்பு கொடுக்கும் போது இட்லிக்கு போய் ஒரு குறிப்பா என யோசித்தேன், எதற்கும் கொடுத்து வைப்போமே என்று தான் கொடுத்தேன், அதற்கு இன்று உங்களை போன்ற சகோதரிகள் சொல்லும் போது மிகவும் சந்தோஷமாகவுள்ளது.
நன்றி, மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

பிரியா சௌந்தராஜன்னின் குஸ்கா செய்தேன்.உங்களுடைய கோழிக்கறி வெள்ளை குருமா செய்தேன் மிகவும் அருமை.இது கொஞ்சம் காரம் கம்மியாக இருந்தது மிளகு தூள் கூட போடவும் பயம் காட்டமாக இருக்கும் என்று.வேற ஏதாவது இருந்தால் சொல்லவும் நன்றி

என் கண்ணை என்னால் நம்ப முடியல
ஒருவழியா உங்களை கண்டு பிடிச்சுடேன்...மாஷாஅல்லாஹ் ரொம்ப நல்லா இருக்கீங்க...உங்கள் வயதுக்கும் தோற்ற்த்துக்கும் ரொம்ப வித்தியாசம்...இந்த இளமை எப்பவும் நீடிக்க என் வாந்த்துக்கள்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

செல்விம்மா நேற்று கோழிக்கறி வெள்ளை குருமா செய்தேன்.ரொம்ப நல்லா இருந்தது.தேன்க்ஸ்மா.கொஞ்சம் கூட மீதி இல்லை.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கோழிக்கறி வெள்ளை குருமா...
ஹாய் கவி,
பாராட்டுக்கு நன்றி. நீ கொஞ்சமா சமைச்சிருக்கே, அதான் மீதமில்லாம போச்சு. எல்லா வீட்டிலேயும் இதே கதை தான்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

இன்று எங்கள் வீட்டில் உங்கள் கோழி வெள்ளை குருமா தான். It was an instant hit!! என் மகனுக்கு மிகவும் பிடித்து இருந்தது!! He's such a fussy eater! அதனால் உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி!! கவி கதை எங்கள் வீட்டிலும்! எப்போதும் சிறிதாவது மீதம் இருக்கும். அதை fridge இல் வெய்ப்பேன். இன்று எல்லாம் காலி! Three kudos to you akka!!

அன்பு தங்கை
உமா

அன்பு உமா,
நலமா? ரொம்ப நாளாச்சு பேசி. மெயில் கூட அனுப்பலை.
ரொம்ப நன்றிப்பா பாராட்டுக்கு. நானும் ஒவ்வொரு முறை இந்த குறிப்பை செய்யு போதும் நினைப்பேன். அதிகம் வைத்து மீதம் வைக்கணும்னு. இருந்தால் தானே! உன் மகனுக்கும் பிடித்தது என்றால் அடிக்கடி செய்து கொடு. நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

வேலையில் மிகவும் busy ஆக இருந்தேன். என்னுடைய வேலையும் finance சம்பந்தப்பட்டது என்பதால் ஆபீஸ் இல் உட்கார கூட நேரம் இல்லை. :( அதுதான் அறுசுவை பக்கம் வர கூட முடியவில்லை. ஆனால் வந்த உடன் எல்லாருடனும் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் போல உள்ளது :)

இந்த வெள்ளை கோழி குருமா இனிமேல் எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யப்போகும் ஒரு உணவு :)

உங்களிடம் ஒரு கேள்வி. இப்படி புதிது புதிதாக உணவு வகைகள் செய்கிறீர்களே அது எப்படி? எனக்கு அறுசுவைக்கு வரும் முன் ஒரு 7 அல்லது 8 விதம் தான் சமைக்க தெரியும். இப்போது கொஞ்சம் நிறைய செய்கிறேன். ஆனாலும் உங்களுடைய குறிப்புகளை பார்த்து அளவுகள் சிறிது கூட மாறாமல் balance எல்லாம் உபயோகப்படுத்தி தான் செய்கிறேன். ஆனால் உங்களுக்கு எப்படி இத்தனை விதம் செய்ய தெரிகிறது? (loose மாதிரி இருக்கிறதா என் கேள்வி?)

அன்புடன்
உமா

அன்பு உமா,
பொறுமையா பதில் சொல்லணும்னு லேட் பண்ணீட்டேன். சாரிப்பா.
வேலைக்கும் போனால் அது தான் பிரச்னை.
இது அடிக்கடி செய்யும் குறிப்பாக மாறியது சந்தோஷம்.

எனக்கு ஒரே மாதிரி சமைத்தால் போரடிக்கும். நிறைய ஊர்களில் இருந்திருக்கேன். அப்பல்லாம் அந்த பக்க ஸ்பெசல், பக்கத்து வீட்டுக்காரங்க செய்யும் சமையல் எல்லாம் கேட்டு தெரிஞ்சிப்பேன்.

அதுவல்லாமல் இன்னிக்கு இது தான் சமைக்கணும்னு முடிவோடு சமையலறைக்கு போக மாட்டேன். என்ன காய் உள்ளதோ, அதில் வித்தியாசமா என்ன சமைக்கலாம்னு பார்த்து செய்வேன். அரைமணி இல்லை முக்கால் மணி நேரம் தான் என் சமையல் நேரம். சிலசமயம் நான் செய்த சமையலை அடுத்த முறை செய்யணும்னா எனக்கே தெரியாது. அதனால நல்லா இருப்பதை உடனே நோட் பண்ணி வெச்சுப்பேன். நிறைய குறிப்புகள் அப்படிதான், நானே கண்டுபிடிச்சது:-))
எங்கம்மாவும் சூப்பரா சமைப்பாங்க. அசைவம் சாப்பிடாமலே நல்லா சமைப்பாங்க. பாட்டி சமையலும் நல்லா இருக்கும்.
தேங்காய் இல்லையா, முந்திரி அரைச்சு போடு. அதுவும் இல்லையா, பாதாம் அரைச்சு போடு. இல்லையா கோவாவை கரைச்சு விடு. இப்படிதான் நான் புதுசு புதுசா கண்டுபிடிப்பேன். இப்படி நான் கண்டு பிடிச்ச குறிப்புகள் ஏராளம். சில சொதப்பும். நிறைய நல்லா வரும். நல்லா வந்தா பிழைச்சாங்க. சொதப்பினா பாவம் கஷ்டப்பட்டு விழுங்குவாங்க எனக்கு பயந்துகிட்டு:-))
அப்பறம் எங்க என்ன சாப்பிட்டாலும் அதில என்னெல்லாம் இருக்குன்னு கண்டு பிடிச்சிடுவேன். அதையும் விடாம செய்து பார்த்திடுவேன். இது தான் என் குறிப்புகளின் ரகசியம்!!
ஏண்டா கேட்டோம்னு இருக்கா?
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

உங்கள் பதிலுக்கு நன்றி. என் அம்மா என்னை சமையல் கத்துக்கோடி என்று சொல்லும்போதெல்லாம் திருட்டுத்தனமாக ஓடி ஓடிவிடுவேன். திருமணம் முடிந்து ஆஸ்திரேலியா வரும் முன்னர் எதாவது கற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்றபோது தான் சமையல் என்றால் என்ன என்றே தெரிந்தது. தனியாக வந்து அவஸ்தைப்பட்டு அவரிடம் சமைக்க கற்று கொண்டு நான் அடித்த கூத்து இருக்கிறதே அதை ஒரு புக் ஆகவே போடலாம். ஆனால் அதற்கு அப்புறமும் எனக்கு சமையல் பெரிய ஆர்வம் எல்லாம் இருந்தது இல்லை. அறுசுவைக்கு வந்த பிறகுதான் இவ்வளவு dishes இருக்கிறது என்றே எனக்கு தெரியும்!!

அதுவும் உங்களை, ஜலீலா அக்காவை, மனோகரி அக்காவை எல்லாம் பார்த்தால் எனக்கு மிகவும் பிரமிப்பாக இருக்கிறது! எப்படி உங்களுக்கு இவ்வளவு சமையல் தெரிகிறது என்று. இப்பொது தெரிகிறது உங்கள் தொழில் ரஹசியம் ;) எதோ உங்களை மாதிரி அக்காக்களால் என்னை மாதிரி ஆட்கள் எதோ காலம் தள்ளிக்கொண்டு இருக்கிறோம்! பதில் அளித்தமைக்கு ரொம்ப நன்றி.

அப்புறம் உங்களை கேட்க வேண்டும் என்று நினைத்தேன். உங்கள் முதுகு வலி இப்போது பரவாயில்லையா? உடம்பை பார்த்து கொள்ளுங்கள்.

பின்குறிப்பு: உங்கள் கண்கள் பேசும் விழிகள்! இதை பார்த்து தான் மாமா மயங்கினாரோ? ;)

அன்பு தங்கை
உமா