வெந்தய குழம்பு

தேதி: October 16, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

வெந்தயம் - 4 தேக்கரண்டி
வரமிளகாய் - 4
மல்லி - 3 தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 8 பல்
புளி - ஒரு எலுமிச்சம்பழ அளவு
தேங்காய் துருவல் - அரை கப்
கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு


 

வெந்தயத்தை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். வரமிளகாய், மல்லி, சீரகம் இவை மூன்றையும் வறுத்து அரைக்கவும். தேங்காயை தனியாக அரைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெய் 6 தேக்கரண்டி ஊற்றி காய வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும்.
ஊற வைத்த வெந்தயத்தை வடிகட்டி வாணலியில் போட்டு வதக்கவும். வதங்கியதும் நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
அரைத்து வைத்திருக்கும் மிளகாய் விழுதினை போட்டு வதக்கவும். பிறகு அரைத்து வைத்திருக்கும் தேங்காயை சேர்க்கவும்.
புளியை கரைத்து ஊற்றி உப்பு சேர்க்கவும். அடுப்பை குறைத்து வைத்து கொதிக்கவிடவும். எண்ணெய் தெளிந்ததும் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

வெந்தயக்குழம்பு நேற்று வைத்தேன் சூப்பர்.நாங்கள் நிறைய வெங்காயம் சேர்த்து வெந்தயக்கறி வைப்போம்.இந்த குழம்பும் பிடித்துபோயிற்று.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

வெந்தயகுழம்பு உடலுக்கு குளிர்ச்சியானது. வெய்யில் காலத்தில் நாக்கு புளிக்குழம்பு கேட்டால் நான் இந்த குழம்புதான் செய்வேன். டயாபட்டிக் பேஷண்ட் அடிக்கடி செய்து சாப்பிடலாம். சுவைத்து பார்த்து பாராட்டியதற்கு நன்றி ஆசியா...!!

மால‌தி மேடம் உங்க வெந்தயக்குழம்பு செய்தேன்,உடம்பு குளிர்ச்சி இந்த வெந்தயக்குழம்பு என்பதால் இதை செய்தேன் ,நன்றாக இருந்தது மேடம் நன்றி.

கவி..!! வெந்தயகுழம்பு டேஸ்ட் உங்களுக்கு பிடித்ததுபற்றி சந்தோஷம்...!! நீங்க எந்த ஊர் கவி.?
இந்த குழம்பிற்கு தேங்காய் அரைத்துப்போடுவதற்கு பதில் பால் பிழிந்து ஊற்றினால் இன்னும் நன்றாக இருக்கும். ஆனால் அது கொஞ்சம் சிரமமாக நினைப்பார்கள் என்று தேங்காயை அரைத்தே போடுமாறு எழுதினேன். நன்றி கவி...!!

மாலதி மேடம் நான் சேலம் (மேடம் எதுக்கு ஊரெல்லாம் கேட்கிறீங்க,ஏதாவது வாய் கொடுத்திருக்கேனா... மனசு திக் திக்னுது:))

மேடம் நீங்க சொன்ன மாதிரி தேங்காய் பால் தான் போட்டேன்,அப்புறம் வந்து பார்த்தால் நான் செய்த மாதிரியே போட்டிருக்கீங்க.(சிரமமே படல மேடம், நான் ரொம்ப சுறுசுறுப்பு :0)

வெந்தய குழம்பு டேஸ்ட் சூப்பர் அம்மா நான்கூட கசப்பாக இருக்குமோ என்று நினைத்தேன் இல்லை சூப்பராக இருந்தது வாழ்த்துக்களும் நன்றியும்.

வாழு, வாழவிடு..