ஐஸ்கிரீம் குச்சிகள் கொண்டு ஃப்ளவர் ஸ்டாண்டு செய்வது எப்படி?

தேதி: October 17, 2007

5
Average: 4.5 (11 votes)

ஐஸ்கிரீம் குச்சிகள் கொண்டு ஃப்ளவர் ஸ்டாண்டு செய்வது எப்படி?

 

ஐஸ் க்ரீம் குச்சிகள் - 6
பூக்கள் (சிவப்பு - 3, வெள்ளை - 3) - 6
ஒயர் (சிவப்பு, வெள்ளை)
மொக்கு (வெள்ளை - 3, மஞ்சள் - 3)
கத்திரிக்கோல்
ஃபெவிக்கால்
பிஸ்நெட் ஒயர்
சின்ன இலை - 3
கம் டேப்

 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்ளவும்.
முதலில் சிவப்பு மற்றும் வெள்ளை நிற ஒயர்களை 3 இஞ்ச் அளவில் ஒவ்வொன்றிலும் 3 ஒயர்கள் வெட்டிக் கொள்ளவும். ஒயரின் முனையை கத்திரிக்கோலால் மேலே உள்ள படத்தில் காட்டியுள்ளபடி கூர்மையாக வெட்டிக் கொள்ளவும். ஓரங்களை வெட்டிய சிவப்பு நிற ஒயரில் வெள்ளை மொக்கை சொருகவும்.
இப்போது அதன் அடிவழியாக சிவப்பு நிற பூவை கோர்க்கவும். இதை போல் மூன்று சிவப்பு நிற ஒயரிலும் பூ மற்றும் மொக்கை கோர்த்துக் கொள்ளவும்.
வெள்ளை நிற பூவில் மேலே மஞ்சள் நிற மொக்கை சொருகவும்.
அதன் அடியில் பச்சை நிற இலையை கோர்க்கவும். கூர்மையாக இருக்கும் வெள்ளை நிற ஒயரில் வெள்ளை நிற பூவை சொருகவும்.
பிஸ்நெட் ஒயரை 3 இஞ்ச் அளவு வெட்டி 3 துண்டுகள் எடுத்துக் கொள்ளவும். வெட்டிய துண்டுகளை ஒவ்வொன்றையும் மெல்லியதாக வெட்டிக் கொள்ளவும் (கடைசி வரை வெட்டாமல் பாதி அளவு வெட்டவும்.) வெட்டிய ஒயர் ஒவ்வொன்றிலும் மணியை கோர்த்துக் கொள்ளவும்.
பின்னர் எல்லாவற்றையும் சேர்த்து அடியில் கம் டேப்பை சுற்றவும்.
கீழ்பாகம் முழுவதும் படத்தில் காட்டியுள்ளபடி டேப் சுற்றி மூடவும். இப்போது பூங்கொத்து தயார்.
முதலில் மூன்று ஐஸ்கிரீம் குச்சிகளை ஃபெவிக்கால் கொண்டு, முக்கோண வடிவில் வைத்து ஒட்டிக் கொள்ளவும்.
முக்கோணத்தின் ஒரு பக்க மையத்தில் இரண்டு இடங்களில் ஃபெவிக்கால் தடவி அதில் இரண்டு குச்சிகளை ஒட்டி, அந்த இரு குச்சிகளின் கீழ் பாகத்தில் குறுக்குவாக்கில் ஒரு ஐஸ்கிரீம் குச்சியை ஒட்டவும். படத்தில் காட்டியுள்ளபடி ஒட்டிக் கொள்ளவும்.
மற்றொரு வகையிலும் ஸ்டாண்டு செய்யலாம். முதலில் மூன்று குச்சிகளை சம இடைவெளி விட்டு நேராக அடுக்கி, அதன் மீது 3 குச்சிகளை அதே அளவு இடைவெளியுடன் ஒட்டவும்.
செய்து வைத்துள்ள ஸ்டாண்டினை ஆணியில் மாட்டி அதில் பூங்கொத்தினை சொருகி வைக்கவும்.
படத்தில் காட்டியுள்ளபடி சம்கிகள் வைத்து ஸ்டாண்டினை அலங்கரிக்கலாம்.
இந்த எளியமுறை ஐஸ்கிரீம் குச்சி ஸ்டாண்டினை செய்து காட்டியவர் திருமதி. எஸ்தர் அவர்கள். கூடைகள் பின்னுதல், அலங்காரப் பொருட்கள் செய்தல், பொம்மைகள் செய்தல் என அனைத்து வகை கைவினைப்பொருட்கள் செய்வதிலும் முறையான பயிற்சி எடுத்து திறன் வளர்த்துக்கொண்டவர்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அப்பா காலைலிருந்து ட்ரை பன்னி இப்ப தான் இந்த பதிவில் லாகின் ஆச்சு...எஸ்தெர் அழகாக செய்துகான்பித்திருக்கிரார்...இனி ஐஸ் குச்சியை தூக்கி எறிய வேன்டாம்....நான் குச்சியிலும் கலர் அடிச்சு செய்து பார்த்துடலாம்னு இருக்கேன்.

தளிகா:-)

நான் குச்சி ஐஸில் உள்ள குச்சியைக் கொண்டு வீடு , கார் எல்லாம் செய்து இருக்கிறேன்.
இப்போ குச்சிக்கு எங்கே போறது .
ஐஸ் சாப்பிட்டா டயட் என்ன ஆவது?
தாளிகா விரைவில் உங்க படைப்பை பார்க்கலாம்... இல்லையா????

படைப்பா..வரஞ்சது படம் வெச்சிருக்கேன்..பென்சில்லா வரஞ்சு குட்டியா படம் போட்டா கன்னுக்க்கு தெரியாது..அதனால ஒரு நாள் மன்றத்தில் லின்க் கொடுத்துடு எங்கயாவது அப்லோட் பன்னிர்ரேன் சரியா

தளிகா:-)

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta