கறி உருளைக்கிழங்கு சால்னா

தேதி: October 17, 2007

பரிமாறும் அளவு: 6, 7நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கறி - அரை கிலோ
உருளைகிழங்கு - கால் கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் - நான்கு தேக்கரண்டி
வெங்காயம் - ஐந்து
தக்காளி - ஐந்து
தயிர் - கால் கப்
பச்சை மிளகாய் - நான்கு
மிளகாய் தூள் - ஒன்றரை தேக்கரன்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரன்டி
உப்பு - தேவையான அளவு
பட்டை, கிராம்பு, ஏலம் - தலா இரண்டு
முந்திரி - ஐந்து
தேங்காய் - சின்ன அரை மூடி
கொத்தமல்லி - ஒரு கொத்து
புதினா - அரை கொத்து
எண்ணெய் - கால் டம்ளர்
டால்டா - ஒரு தேக்கரண்டி


 

எண்ணெயை காய வைத்து பட்டை, ஏலம், லவங்கம் போட்டு வெடித்ததும். வெங்காயம் போட்டு வதக்கவும். பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.
கொத்தமல்லி, புதினா போட்டு இரண்டு நிமிடம் வதக்கி தக்காளி, பச்சை மிளகாய் போடவும், சிறிது மூடி போட்டு வேக விட்டு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போடவும். நல்ல கிளறி கறியை போட்டு மூடி போட்டு ஐந்து நிமிடம் வேக விடவும்.
பிறகு தயிர், உருளைக்கிழங்கு நான்காக அரிந்து போட்டு நல்ல கிளறி குக்கரில் மூன்று விசில் விட்டு இறக்கி, தேங்காய் முந்திரியை அரைத்து ஊற்றி நல்ல இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு சிறிது மல்லி தழை தூவி இறக்கவும். சுவையான சால்னா ரெடி.


இஸ்லாமிய இல்லங்களில் ஒரு விசேஷம் என்றால் பகார சோறு, கறி உருளைக் கிழங்கு சால்னா, தால்சா, மட்டன் ஃப்ரை (அ) மட்டன் கூட்டு, வெங்காய முட்டை, அப்பளம், ஏதாவது இரு வகை ஸ்வீட் செய்வார்கள்.
இதை நெய் சோறு, ரொட்டி, சப்பாத்தி, பூரி, மருந்து சோறு, பரோட்டா முதலியவற்றிற்கு தொட்டுக்கொள்ளலாம். வெஜிடேரியனாக இருந்தால் உருளைக் கிழங்கு கொஞ்சம் அதிகமாக(1/2kg) சேர்த்து கொண்டு, கறி போட வேண்டாம்

மேலும் சில குறிப்புகள்


Comments

ஜலீலா உங்க சால்னாவை கறி இல்லாமல் வெறும் உருளை,கேரட்,பீன்ஸ் வைத்து செய்தேன்..கூட 1/2சிக்கன் ச்டாக் போட்டேன்...ஆஹா சூப்பெர்பா வந்தது

தளிகா:-)

செய்து பார்த்து உடனே ரிசல்ட் சொன்னதற்கு ரொம்ப தேங்ஸ் தளிக்கா

Jaleelakamal

எங்கள் வீட்டில் இன்று நெய் சொறும் உங்கள் உருளைக்கிழங்கு சால்னாவும் , மணமும் சுவையும் ருசியும் பிரமாதம் போங்கள்... அருமையாக இருந்தது,

ரொம்ப ரசித்து சாப்பிட்டோம். நன்றி ஜலீலா அக்கா..

அமிழ்தினி ரொம்ப நன்றி செய்து பார்த்ததற்கு,
இதே ஈசியான முறையுலும் செய்யலாம்.சொல்லி தறேன்
நானும் நேற்று கீரைஸ் (பகாறா சோறு), கறி உள்ருளை குழம்பு, தக்காலி பருப்பு,சிக்கன் லாலி பாப் பிறை செய்தேன், இன்னும் ஒரு ஐடியா, எப்படியும் சாலானவும்,பருப்பும்,நெய் சோறும் மீதி யாகும்.
அதை என்ன நெய்யனும், அதை யே திருப்பியும் சாப்பிட்டால் போரடத்து விடும்.
ஆகையால் எவாளவு சாதம் மீதி இருகோ அதற்கு ஏற்றார் போல, சால்னா ஒரு கின்னம் அளவும்,பருப்பு ஒரு கின்னம் ஆளவும் எடுத்து கட்டியாக இருந்தால் கொஞ்சமா தண்ணீர் சேர்த்து கொதிக்கவீடு, சாத்தை மிக்ரொவேவ்வில் ஒரு நிமிடம் சூடுபடுத்தி கட்டியில்லாமல் உடத்து விட்டு கொதிக்கும் (கறி சால்னாஅ,பருப்பில் கொட்டி நல்ல கிளறி கொஞ்சம் தண்னீரும் தளப்புமாக இருந்தாலும் பரவாஇல்லை சாதம் கிரேவிசேர்ந்து கொதித்ததும் இரக்கிவிடுங்கள், ஆறவைத்து பிரிட்ஜில் வைத்து விடுங்கள்.மறு நளோ (அ) ஒரு நாள் கழித்தொ எடுத்து அதற்கு தொட்டுகொள்ள, ஊறுகாய் (அ) அப்ப்ளம் (அ) மசால் வடை வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். அடுத்த தடவை இப்படி செய்வதற்காகவே கீரைஸ்,சால்னா,பருப்பு கூடசெய்வீர்கள்.
இந்த சாத்த்தின் பெயர் தீ யெரிச்ச சாதம்.(அதுவும் தக்காள் பருப்புக்கு பதில் தால்சா சேர்த்து செய்தால் இன்னும் அருமை) என்னுடைய குறிப்பில் தல்சாவும் இருக்கு)
ஜலீலா

Jaleelakamal

ஓ.. அப்படியா அக்கா..
செய்து பார்க்கிறேன்...இவ்வளவு விளக்கமாக மெனக்கட்டு சொன்னதற்கு Thanks..

எப்படித்தான் இத்தனை item ஒரே நாளில் செய்கிறீர்களோ என்று ஆச்சரியமாக இருக்கிறது எனக்கு...

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. சாதிகா அவர்கள் தயாரித்த கறி உருளைக்கிழங்கு சால்னாவின் படம்

<img src="files/pictures/aa239.jpg" alt="picture" />

ஸாதிகா அக்கா நீங்க என்னை சொல்லி விட்டு அதற்கும் மேல் சூப்பரா அசத்தி இருக்கீங்க.
ரொம்ப சில பிஸியான ஆட்கள் செய்து பார்ப்பதே பெரிய விஷியம் அதை உடனே சாப்பிடும் முன் போட்டோ எடுப்பது பற்றி எனக்கு தான் தான் தெரியும்,
களறியில் செய்வது போல் செய்து இருக்கீங்க.ரொம்ப ஜோரா இருக்கு

அட்மினுக்கும், உங்களுக்கும் மிக்க நன்றி, ரொம்ப சந்தோஷம்.

Jaleelakamal

ஜலீலா, எப்படி இருக்கீங்க? நான் இதை சிக்கனுடன் செய்தேன். வீட்டில் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிட்டார்கள். நன்றி உங்களுக்கு.

வினி நலமா,செய்து பார்த்தற்கும் , உடனே பின்னூட்டம் கொடுத்தமைகும் மிக்க நன்றி, கலா எப்படி இருககாங்க
விசாரித்தேன் என்று சொல்லவும்.
சிக்கன் உருளை அதுவும் சூப்பரா இருக்கும் இதுக்கு என் பகறா கானா சூப்பர் காம்பினேஷன்.

Jaleelakamal