www.arusuvai.com
ஃபிரைட் ரோபு - வெஜிடபிள் (Fried Tofu & Vegies)
இது ஒரு தாய்லாந்து சமையலாகும்.
தேவையானப் பொருட்கள்
- ரோபு (Tofu)- 1 கப்
- கரட் - 1/2 கப்
- பெல் பெப்பர் - 1/4 கப்
- பீன்ஸ் - 1/2 கப்
- அஸ்பராகஸ் - 1/2 கப்
- காலிஃபிளவர் - 1/2 கப்
- வெங்காயம் - 1/4 கப்
- உள்ளி - 4 பல்லு
- பச்சை மிளகாய் - 3
- இஞ்சி - 1 தேக்கரண்டி
- மிளகாய் ஃபிளேக்ஸ் - 1 தேக்கரண்டி
- பிரவுண் சீனி - 1 தேக்கரண்டி
- சோய ஸோஸ் - 1 1/2 தேக்கரண்டி
- பட்டர் - 3 மேசைக்கரண்டி
- உப்பு
செய்முறை
- கரட், பெல்பெப்பர், பீன்ஸ். அஸ்பராகஸ், வெங்காயம், பச்சை மிளகாய் என்பவற்றை நீளமான துண்டுகளாக வெட்டவும்.
- ரோபு, காலிஃபிளவர், இஞ்சியை சிறிய துண்டுகளாக வெட்டவும்.
- உள்ளியை நசித்து வைக்கவும்.
- ஒரு பானில் சிறிது எண்ணெய் விட்டு ரோபுவை சோட்டே(sautee) செய்யவும்.
- ஒரு பாத்திரத்தில் பட்டரை போட்டு உருகியதும் மிளகாய் ஃபிளேக்ஸ், உள்ளியை போட்டு வதக்கவும்.
- பின்னர் இஞ்சி, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
- பின்னர் மரக்கறிகள், உப்பை போட்டு கிளறி மூடி 8- 10 நிமிடங்கள் மூடி மிதமான சூட்டில் அவிய விடவும்.
- பின்னர் மூடியை திறந்துவிட்டு தண்ணீர் வற்றும்வரை விடவும்.
- தண்ணீர் வற்றி காய்கள் ஓரளவு வதங்கியதும் அதனுள் சோயா ஸோஸ், பிரவுண் சீனி சேர்த்து 2 - 3 நிமிடங்களுக்கு கிளறவும்.
- பின்னர் ரோபுவை கொட்டி கலந்து இறக்கவும்.
- சுவையான ரோபு டிஷ் தயார். இதனை தனியேவும் சாப்பிடலாம் அல்லது நூடில்ஸ், ஸ்பகடியுடன் சேர்த்தும் உண்ணலாம்.
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
2 - 3 நபர்களுக்கு |
10 - 15 நிமிடங்கள் |
20 - 25 நிமிடங்கள் |