மேத்தி ரோட்டி (வெந்தயக்கீரை ரொட்டி)

தேதி: October 18, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெந்தயக் கீரை -- 1 கட்டு (சுத்தம் செய்து நறுக்கியது)
மல்லித் தழை -- 1/2 கப் (நன்றாக நறுக்கியது)
பச்சை மிளகாய் -- 4 என்னம் (பொடியாக நறுக்கியது)
தக்காளி -- 1 என்னம் (நறுக்கியது)
உப்பு -- தே.அ
மிளகாய் தூள் -- 2 டீஸ்பூன்
நெய் -- 1 டீஸ்பூன்
மைதா மாவு -- 1/4 கிலோ


 

வெந்தயக் கீரையுடன் ,மல்லித்தழை, பச்சைமிளகாய், தக்காளி, உப்பு, மிளகாய்த்தூள், நெய் கலந்து வேக வைக்கவும்.
தண்ணீரில்லாமல் நன்றாக வெந்தபின் இறக்கிவிடவும்.
ஆறியபின் மைதாமாவுடன் கலந்து கெட்டியாக பிசையவும்.
இதை சப்பாத்திக்கு உருட்டுவதைப் போல சிறு சிறு வட்டங்களாக இட்டு வைக்கவும்.
வாணலியில் 2 கப் எண்ணைய் ஊற்றி செய்து வைத்துள்ள வட்டங்களை போட்டு பொரிக்கவும்.
மேத்தி ரொட்டி ரெடி.


மேலும் சில குறிப்புகள்