எண்ணைய் பற்றி சொல்லுங்களேன்!!!

சமையல் எண்ணைய் சந்தேகம் எனக்கு!!
தெரியுமா உங்களுக்கு!!
சொல்லுங்களேன் விளக்கி!

சமைக்கும் எண்ணையில்
1.கார்ன் ஆயில்
2.சன் ஃப்ளவர் ஆயில்
எது நல்லது?
இன்னும் வேற எண்ணைகள் உள்ளதா?
ஃப்ளீஸ்

வணக்கம் சுபா,

நான் பரிந்துரைப்பது நல்லெண்ணைதான், வதக்குதல்,தாளித்தல் போன்ற தேவைகளுக்கு நான் பாவிப்பது நல்லெண்ணை. Deep fryingக்கு மட்டும் sunflower oil பாவிப்பேன்.இதைவிட "பிட்ஸா" "பாஸ்தா" போன்றனவற்றிற்க்கு ஒலிவ் எண்ணையே பாவிப்பேன்.
நல்லெண்ணை bad cholesterolஐக் குறைக்கும் தன்மை உடையது.

நன்றி.

நம்ம ஊர் இதயம் நல்லெண்ணெயை மறந்துட்டீங்களே சுபா...இதயத்திற்கு இதமான எண்ணெயாச்சே...புளியோதரைக்கு ஸ்பெஷல் வாசனை!!!

டியர் சுபா,

இரண்டு அல்லது மூன்று எண்ணெய் கலந்து சமையல் செய்தால் உடல் நலத்திற்கு நல்லது என்று கேள்வி பட்டிருக்கிறேன். அதனால் நான் sundrop heart (Rice bran oil , சன் ஃப்ளவர் ஆயில் கலந்தது) உபயோகிக்கிறேன்.

நன்றி தோழிகளே!!

ஹாய் விது நீங்கள் இதயம் மட்டுமா யூஸ் பண்ணுகிறீர்கள்?
நான் இங்கே கிடைக்கும் சன் ஃப்ளவர் ஆயிலுடன் இதயம் சேர்த்து யூஸ் பண்ணுகிறேன்.
ஆனால் முழு சமையலுக்கும் அது உகந்த்தா?
நான் கேட்டது எதில் ஃபேட் , கொலஸ்ட்ரால் குறைவு என்பது போன்ற பதிலுக்க்காக!!
எதிர் பாத்து காத்திருக்கிறேன்.

இதயம் நல்லெண்ணெயுடன், CORN OIL ம் உபயோகிக்கிறேன் சுபா. சேர்த்துன்னா எப்படி? மிக்ஸ் பண்ணியா?

ஹாய் சுபா,
நல்ல எண்ணெய்னு சொல்லனும்னா கார்ன் ஆயிலும், ரைஸ் பிராண் ஆயிலும் தான். நீ கேட்ட மாதிரி கெட்ட கொழுப்பு குறைந்த எண்ணெய் வகைகள் அவை. (ஆலிவ் ஆயில் பற்றி யாமறியோம்).
சூர்யகாந்தி எண்ணெயை உபயோகிக்கலாம்னாலும் அதிகமாக சேர்த்துக்கிட்டா சில பேருக்கு வாந்தி, தலைசுற்றல் ஏற்படும்.
நல்லெண்ணெயை அளவோடு உபயோகிக்கலாம் (இட்லிப்பொடி, பருப்புப்பொடி, புளியோதரை, வத்தக்குழம்பு, மீன் குழம்பு போன்றவற்றிற்கு). ஜமாய் :-)
எந்த எண்ணெயாக இருந்தாலும் அளவுக்கு மீறாமல் பார்த்துக்கொள்வது உடல்நலத்திற்கு நல்லது. அதிகபட்சம் (மீண்டும் சொல்கிறேன் அதிகபட்சம்) ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு 1 லிட்டர் எண்ணெய்க்கு மேல் செலவழிக்கக் கூடாது. அதற்கும் கீழே எவ்வளவு குறைக்கிறோமோ அவ்வளவு ஆரோக்கியத்திற்கு நல்லது.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

i live in usa, which oil is to buy to keep control of cholestrol. please advice me

எந்த ஆயிலாக இருந்தாலும் கம்மியாக பயன் படுத்துங்கள்,
ஆலிவ் ஆயிலும்,நல்லெண்ணையும் நல்லது .
ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்