காலிஃபிளவர் உருளைக்கிழங்கு கறி

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக்கிழங்கு - 200 கிராம்
காலிஃபிளவர் - 200 கிராம்
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - ஒன்று
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி
தக்காளி - 4
பால் - 100 மில்லி
கொத்தமல்லி - ஒரு சிறிய கட்டு
உப்பு - தேவைகேற்ப
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி


 

காலிஃபிளவரை வெந்நீரில் போட்டு சிறிது நேரம் கழித்து எடுக்கவும்.
உருளைக்கிழங்கு, காலிஃபிளவர், தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாதி அளவு தக்காளியை எடுத்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் வெந்தயத்தை போட்டு மிதமான தீயில் வைத்து பின்னர் சிறிது நேரம் கழித்து வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
அதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் இவற்றை சேர்த்து 2 நிமிடம் வைக்கவும்.
பின்னர் அரைத்து வைத்த தக்காளியை அதில் சேர்த்துக் கலக்கி உருளைக்கிழங்கு, காலிஃபிளவர், தக்காளி, பால், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கு நன்கு வெந்ததும் அதில் கொத்தமல்லியை மேலே தூவி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

its very good என் விட்டில் உள்ள வர்களுக்கு இது மிகவும் பிடித்து உள்ளது thanks a lot