க்ரிஸ்பி புசு பூரி

தேதி: October 18, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

மைதா - மூன்று கப்
சோடா மாவு - ஒரு பின்ச்
உப்பு - ஒரு தேக்கரண்டி
சர்க்கரை - ஒரு தேக்கரண்டி
தயிர் - இரண்டு தேக்கரண்டி
வறுத்த ரவை - இரண்டு தேக்கரண்டி
தண்ணீர் - பிசைய தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு


 

பூரி செய்வதற்கு மூன்று மணி நேரம் முன்பே மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் போட்டு மாவை நன்றாக பிசையவும். பிறகு மூன்று தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு ஒரு வாளியில் வைக்கவும்.
பிறகு பூரி சுடும் முன்பு எல்லா மாவையும் உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.சிறிது மைதா மாவை கையில் தடவி உருண்டைகளாக உருட்டி போட்டு வைத்து விடுங்கள்.
இப்போது அந்த உருண்டையை சப்பாத்தி கல்லில் தேய்த்து ஒரு பெரிய வாணலியில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பொரித்து எடுக்கவும்.
சிறிய பூரியோ, பெரிய பூரியோ உங்கள் விருப்பம் சுட்டு சாப்பிடவும்


மாவு பிசையும் போது ஒரு ஈஸி வழி மாவில் எல்லா பொருட்களையும் போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு கட்டை கரண்டியால் கிளறி ஐந்து நிமிடம் வைத்து விடுங்கள். பிறகு அது செட்டாகி விடும். இப்போது மறுபடியும் ஒரு கிளறு கிளறி பிறகு கையால் பிசைந்தால் கையில் ஒட்டாமல் திரண்டு வரும். மாவு பிசையவதற்கும் ஈஸி.

மேலும் சில குறிப்புகள்