தேவையானப் பொருட்கள்
- அரிசி களைந்த தண்ணீர் - ஒரு டம்ளர்,
- பருப்பு வேக வைத்த தண்ணீர் - ஒரு டம்ளர்,
- புளி - ஒரு சிறிய எலுமிச்சம் பழ அளவு,
- தக்காளி - 1,
- மிளகு - 1/2 டீஸ்பூன்,
- சீரகம் - 1/2 டீஸ்பூன்,
- மல்லி விதை - 1 டீஸ்பூன்,
- வர மிளகாய் - 1,
- பூண்டு பல் - 4,
- வெல்லம் - 1/4 டீஸ்பூன்
- பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை - தேவையான அளவு
|
செய்முறை
- புளியை அரிசி களந்த தண்ணீரில் ஊறவிடவும்.
- மிளகு, சீரகம், மல்லி, வரமிளகாய் இவற்றை அரைத்துக்கொள்ளவும். பூண்டு பல்லை தட்டி எடுக்கவும்.
- ஒரு வாணலியில் கடுகு, பெருங்காயம் தாளித்து புளியை கரைத்து ஊற்றவும்.
- உப்பு, தக்காளி சேர்த்து கொதிக்க விடவும்.
- 5 நிமிடம் கொதித்ததும் அரைத்து வைத்திருக்கும் பொடியை போட்டு கொதிக்கவிடவும்.
- 3 நிமிடம் கொதித்ததும் பருப்புதண்ணீர் சேர்க்கவும்.
- ரசம் நுரை கட்டியதும் கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, வெல்லம் சேர்த்து இறக்கவும்.
|
சமீபத்தியக் கருத்துக்கள்
27 நிமிடங்கள் 56 நொடிகள் முன்பு -
43 நிமிடங்கள் 55 நொடிகள் முன்பு -
49 நிமிடங்கள் 20 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 20 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 39 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 41 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 14 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 19 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 23 நிமிடங்கள் முன்பு -