உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

ஆப்பிள் சாஸ்

 


தேவையானப் பொருட்கள்

  • ஆப்பிள் -- 1 கிலோ
  • எலுமிச்சை தோல் -- 1
  • வெண்ணைய் -- 2 டேபிள்ஸ்பூன்
  • சர்க்கரை -- 2 டேபிள்ஸ்பூன்
  • ரோஸ்பவுடர் -- சிறிது
  • பச்சை மிளகாய் -- 2 என்னம் ( பொடியாக நறுக்கியது)

செய்முறை

  • ஆப்பிளின் தோல்,விதைகளை நீக்கி சிறு சிறு துண்டுகளாக்கவும்.
  • ஃப்ரஸ்ஸான எலுமிச்சைதோலை மட்டும் தனியாக எடுத்து மிகவும் பொடியாக நறுக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் 6 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி நறுக்கிய ஆப்பிள் மற்றும் எலுமிச்சை துண்டுகளை போடவும்.
  • அப்படியே இதை வேக வைக்கவும்.
  • நன்கு வெந்ததும் கரண்டியால் கூழ் போல் மசிக்கவும்.
  • உடன் சர்க்கரையை சேர்க்கவும்.
  • சர்க்கரை கரையும் வரை அப்படியே வைத்து ரோஸ் பவுடரை போடவும்.
  • ரோஸ்கலரில் வந்ததும் வெண்ணையை போட்டு கலக்கவும்.
  • மிளகாய் துண்டுகளை தாளித்து ஊற்றி பரிமாறலாம்.
  • சப்பாத்தி , பரோட்டாவிற்கு சைட் டிஷ்ஷாக பரிமாறலாம்.
  • ஆப்பிள் சாஸ் ரெடி.

வழங்கியவர்

Subha Jayaprakash -- Dubai

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

15 நிமிடம் 25 நிமிடம்
random food image


comments
ஆப்பிள் சாஸ்
அக்டோபர் 19, 2007 - 2:34pm - வழங்கியவர் ambika_dt

ஹாய் சுபா ,ஆப்பிள் சாஸ் நல்லா இருக்கு.இத எதற்கு பயன்படுத்துவது?ஃபிரிஜ்ஜில் எத்தனை நாள் வைக்கலாம்?

சமைத்த அன்று உள்ள டேஸ்ட் போல்.....
அக்டோபர் 20, 2007 - 5:31am - வழங்கியவர் Subha Jayaprakash

ஹெலோ,
அம்பிகா மேடம்,
நான் தான் அதில் குறிப்பிட்டுள்ளேனே!
சப்பாத்தி,புரோட்டாவிற்கு சைஃட் டிஸ்ஸாக பயன்படுத்தலாம்....
3 நாள் ஃப்ரிஜ்ஜில் வைக்கலாம் நன்றாக இருக்கும்...
ஆனால் சமைத்த அன்று உள்ள டேஸ்ட் போல் இருக்காது...

சமைத்த அன்று உள்ள டேஸ்ட்
அக்டோபர் 23, 2007 - 11:51am - வழங்கியவர் ambika_dt

நன்றி சுபா மேடம்..