கார்லிக் ப்ரான்

தேதி: October 18, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

இறால் - பத்து (பெரியது)
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
முழு மிளகாய் - மூன்று
டொமேடோ சாஸ் - மூன்று மேசைக்கரண்டி
சோயா சாஸ் - மூன்று தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - இரன்டு தேக்கரண்டி
பட்டர் - இரண்டு தேக்கரண்டி
பூண்டு - அரை பூண்டு
கொத்தமல்லி - சிறிது மேலே தூவ


 

இறாலை நன்றாக சுத்தம் செய்து அதில் மிளகாய் தூள், உப்பு, இஞ்சி பூண்டு, டொமேட்டோ சாஸ், சோய சாஸ், முழு காய்ந்த மிளகாய் திரித்து போட்டு ஐந்து நிமிடம் ஊற வைக்கவும்.
சட்டியை காய வைத்து எண்ணெய், பட்டர் ஊற்றி பூண்டை பொடியாக நறுக்கி போட்டு நல்ல வதக்கி பிரட்டி வைத்திருக்கும் ப்ரான் மசாலாவை போட்டு வதக்கி வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இப்ப கொஞ்ச முன்ன தான் நாளைக்கு வேன்டி இப்ப வே செய்து வெச்சுடலாம்னு செம்மீன் செய்தேன்..எப்பவோ யாரோ சொல்லி கேட்டிருக்கேன் பூண்டு சேர்த்து செம்மின் செய்தால் நல்ல இருக்கும்னு,,,கரெக்டா உங்க குறிப்பு கன்னில் பட அதையே செய்தேன்..நான் ஊறவைக்கவும் பூன்டு மட்டும் தான் போட்டேன்...இஞ்சி போடலை...சூப்பெரா வந்தது

தளிகா:-)