உருளைப்பொரியல்

தேதி: October 19, 2007

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக்கிழங்கு - 2
நறுக்கிய சின்ன வெங்காயம் - 6
கடுகு - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
குருமிளகுப் பொடி - ஒரு தேக்கரண்டி
பூண்டு - ஒன்று
சீரகம் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி


 

உருளைக்கிழங்கை நறுக்கி தண்ணீர், உப்பு சேர்த்து ஒரு முக்கால் அளவு வேக வைத்து, தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பூண்டு பல்லை அரை தேக்கரண்டி சீரகத்துடன் அரைக்காமல் ஒன்றிரண்டாக தட்டி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயை சூடாக்கி அதில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வறுத்து அதில் வேக வைத்த உருளைக்கிழங்கை போட்டு கிளறி தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
பிறகு தட்டிய பூண்டு சீரகம், குருமிளகுப்பொடி சேர்த்து கிளறி 5 நிமிடம் மூடி வைத்து சூடாக பரிமாறவும். சுவையான உருளைப்பொரியல் தயார்.


மேலும் சில குறிப்புகள்


Comments

தளிகா, உருளைப் பொரியல் 21ம் திகதி செய்தேன். சுவையாக இருந்தது. இப்போதான் பின்னூட்டம் கொடுக்க முடிந்தது.

‍- இமா க்றிஸ்

அலுக்காமல் நீங்க பின்னூட்டம் தருவது அதிசயமாக உள்ளது..thanx imma