கீமா மட்டர் |
|
தேவையானப் பொருட்கள்
- கொத்தின ஆட்டிறைச்சி - 1/4 கிலோ,
- பச்சை பட்டாணி (உரித்தது) - 1 கப்,
- பெரிய வெங்காயம் - 1,
- தக்காளி - 2,
- இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி,
- மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி,
- தனியா தூள் - 2 தேக்கரண்டி,
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
- சீரகம் - 1/2 தேக்கரண்டி,
- கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி,
- பட்டை - சிறிது,
- ஏலக்காய் - 1,
- தயிர் - 2 மேசைக்கரண்டி
- கொத்தமல்லி தழை - சிறிது
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 3 ஸ்பூன்
|
இறைச்சியை கழுவி சுத்தம் செய்யவும். தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும்.
|
 |
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும்.
|
 |
ப்ரஷர் பேனை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, சீரகம், பட்டை, ஏலக்காய் போடவும். பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
|
 |
பச்சை வாசனை போனதும், தக்காளி சேர்த்து வதக்கவும்.
|
 |
தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். பிறகு கொத்தின கறி சேர்த்து வதக்கவும்.
|
 |
கறி நன்கு வதங்கிய பின் பட்டாணி சேர்த்து வதக்கவும்.
|
 |
தயிரையும் உப்பையும் சேர்த்து கிளறவும்.
|
 |
1 கப் தண்ணீர் ஊற்றி பேனை மூடி 3 விசில் விடவும்.
|
 |
சூடு குறைந்ததும் பேனை திறந்து தண்ணீர் வற்றும் வரை அடுப்பில் வைத்து கிளறவும்.
|
 |
எண்ணெய் பிரிந்து பதமாக வரும் போது கொத்தமல்லி தூவி இறக்கவும்.
|
 |
சப்பாத்தி, பரோட்டா, நாண் போன்றவற்றிற்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும். தண்ணீரை சுத்தமாக வற்ற விட்டு, சப்பாத்தி, நாண் போன்றவற்றிற்கு ஸ்டஃப் செய்யவும் பயன்படுத்தலாம்.
|
 |
அறுசுவையில் 200 க்கும் அதிகமான குறிப்புகள் வழங்கி, மன்றத்தில் ஏராளமான பயனுள்ள குறிப்புகளையும் கொடுத்து வரும் திருமதி. செந்தமிழ்ச்செல்வி அவர்கள் சமையலில் 28 வருடங்கள் அனுபவம் உடையவர். சைவம், அசைவம் என இரண்டிலும் அசத்தக்கூடியவர். இன்னும் ஏராளமான குறிப்புகளை அறுசுவை நேயர்களுக்கு வழங்கவிருக்கின்றார்.
|
 |
|
முந்தைய குறிப்புகள் பக்கத்திற்குச் செல்ல..
|
சமீபத்தியக் கருத்துக்கள்
4 நிமிடங்கள் 58 நொடிகள் முன்பு -
10 நிமிடங்கள் 44 நொடிகள் முன்பு -
20 நிமிடங்கள் 15 நொடிகள் முன்பு -
22 நிமிடங்கள் 33 நொடிகள் முன்பு -
32 நிமிடங்கள் 47 நொடிகள் முன்பு -
36 நிமிடங்கள் 43 நொடிகள் முன்பு -
39 நிமிடங்கள் 9 நொடிகள் முன்பு -
55 நிமிடங்கள் 18 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 15 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 17 நிமிடங்கள் முன்பு -