மெக்சிகன் ரைஸ்

வழங்கியவர் : Renuka
தேதி : ஞாயிறு, 21/10/2007 - 15:54
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
- முட்டைகோஸ் - 50 கிராம்
- வெங்காயம் - 2
- தக்காளி - 1
- குடைமிளகாய் - 1
- பூண்டு - 2 பல்
- மிளகாய்தூள் - 1 ஸ்பூன்.
- எண்ணெய் - 3 ஸ்பூன்
- நெய் - 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- அரிசி - 1 கப்
- முட்டைகோஸை மெலிதாகவும் நீளமாகவும் நறுக்கவும்.
- ஒரு வெங்காயத்தை நீளமாகவும், மற்றொரு வெங்காயத்தை பொடியாகவும் நறுக்கவும்.
- பூண்டு, தக்காளி இவற்றை பொடியாகவும், குடைமிளகாயை நீளமாகவும் நறுக்கவும்.
- குக்கரில் ஒரு ஸ்பூன் எண்ணெய், ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து பூண்டையும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் போட்டு வதக்கி அரிசிக்கு ஏற்ற தண்ணீர் ஊற்றி உப்பு, அரிசி போட்டு 2 விசில் வந்தவுடன் இறக்கவும்.
- வாணலியில் 2 துளி எண்ணெய் விட்டு நீளமாக நறுக்கிய வெங்காயத்தை மட்டும் வதக்கவும்,
- கலர் மாறியதும் எடுத்து வேறு பாத்திரத்தில் போடவும்.
- அடுத்து கோஸை மட்டும் 2 துளி எண்ணெயில் 2 நிமிடம் வதக்கி வெங்காயம் இருக்கும் பாத்திரத்தில் கொட்டவும்.
- ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி தக்காளி, குடைமிளகாயை வதக்கி மிளகாய் தூள், உப்பு சேர்க்கவும்.
- தக்காளி கரையும் வரை வதக்கவும். லேசாக தண்ணீர் தெளித்து விடவும். காய் வெந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி வெங்காயம், கோஸ், சாதம் அனைத்தையும் நன்றாக கிளறி பரிமாறவும்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
45 நிமிடங்கள் 32 sec முன்பு
48 நிமிடங்கள் 48 sec முன்பு
ஒரு மணி நேரம் 52 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 56 நிமிடங்கள் முன்பு
2 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்பு
2 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்பு
2 மணிநேரம் 3 நிமிடங்கள் முன்பு
2 மணிநேரம் 7 நிமிடங்கள் முன்பு
2 மணிநேரம் 24 நிமிடங்கள் முன்பு
2 மணிநேரம் 50 நிமிடங்கள் முன்பு