முட்டைகோஸ் சட்னி

தேதி: October 21, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முட்டை கோஸ் - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 1
தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
புளி - சிறிது
கடுகு, உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 ஸ்பூன்


 

கோஸ், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கவும்.
அடுப்பில் எண்ணெயை காய வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல் போட்டு தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
பிறகு கோஸ் சேர்த்து பச்சைவாடை போகும் வரை வதக்கவும்.
இப்பொழுது தக்காளி, தேங்காய், புளி, உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கி இறக்கவும்.
ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைக்கவும்.
இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிடலாம்


மேலும் சில குறிப்புகள்


Comments

ரேணுகா உங்களுடைய குறிப்பில் முட்டைகோஸ் சட்னிமிக மிக சுவையாக இருந்தது அத்துடன் இப்படிப்பட்ட சுவையான குறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கின்றேன் .

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

ரேணு.... முட்டைகோஸ்'ல சட்னி'யான்னு யோசிச்சேன்.... சூப்பரா இருந்ததுங்க. எனக்கு ரொம்ப பிடிச்சுது. நலமா இருக்கீங்களா?? உங்களை காணவே முடியலயே.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா