ராகி பானம்

தேதி: October 21, 2007

பரிமாறும் அளவு: மூன்று நபர்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ராகி பவுடர் - இரண்டு தேக்கரண்டி
உப்பு - ஒரு பின்ச்
சர்க்கரை - ஐந்து டீஸ்பூன்
தண்ணீர் - 2 1/4 கப்
பால் - 1 1/4 கப்
ஏலம் - ஒன்று
நெய் - ஒரு சொட்டு
சஃப்ரான் - இரண்டு இதழ்


 

முதலில் ராகியை முக்கால் டம்ளர் தண்ணீரில் கலக்கி ஒரு டீ வடிகட்டி கொண்டு வடிகட்டவும்.
மறுபடியும் வடிகட்டிய ராகியை அதே டம்ளரில் கொட்டி முக்கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி கலக்கி வடிக்கட்டவும்.
இந்த வடிகட்டிய ராகி ஒரு டீ கைப்பிடியில் ஊற்றி அதில் உப்பு சர்க்கரை, ஏலம் போட்டு நல்ல காய்ச்சி கடைசியில் பால், சஃப்ரான், நெய் ஊற்றி இறக்கவும்.


ராகி நல்ல தெம்பூட்டும் பானம். சிறு குழந்தைகளுக்கு மூன்று மாதம் முதல் கொடுக்கலாம், நாமும் குடிக்கலாம், வயதானவர்களுக்கும் கொடுக்கலாம்.
தேவைப்பட்டால் பாதம், முந்திரி, பிஸ்தா, எல்லாம் திரித்தும் கூட போட்டு காய்ச்சலாம். குழந்தைகளுக்கு வயிற்று போக்கு இருந்தால் உடைத்த கடலையை திரித்தும் போட்டு காய்ச்சலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

டியர் விஜி ராகி பாணம்
பாதம் , இதையும் பாருங்கள்./

ஜலீலா

Jaleelakamal

டியர் அட்மின் பிளீஸ் புதிய தளத்தில், இஸ்லாமிய,பிராமண குறிப்பு என்பது போல் குழந்தைகளுக்கும் அதீல் ஒரு பகுதி போடுங்கள்.
ஜலீலா

Jaleelakamal