நீர் மோர்

தேதி: October 22, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தயிர் -- 1 கப்
பச்சை மிளகாய் -- 2 என்னம்
இஞ்சி -- 1 அங்குலம்
கறிவேப்பிலை -- 3 இனுக்கு
கொத்தமல்லி -- 1/4 கட்டு
உப்பு -- தே.அ
தாளிக்க:
எண்ணைய் -- 1டீஸ்பூன்
கடுகு,உளுத்தம்பருப்பு -- 1 டீஸ்பூன்
பெருங்காயம் -- 1 டீஸ்பூன்


 

முதலில் தயிருடன் 3 கப் தண்ணீர் சேர்த்து நன்கு நுரை வர பாத்திரத்தில் மாற்றி மற்றி ஊற்றி கொள்ளவும்.
அத்னுடன் உப்பு சேர்க்கவும்.
இஞ்சி,பச்சைமிளகாயை நன்கு அரைக்கவும். இதை மோரில் கொட்டவும்.
வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு , பெருங்காயம் தாளிக்கவும். பாதிஅளவு கறிவேப்பிலையை தாளிக்க போடவும்.
இதை மோரில் ஊற்றவும்.
நன்றாக கலக்கவும்.
மீதியுள்ள கறிவேப்பிலை,கொத்தமல்லி தழையை போடவும்.
நீர் மோர் ரெடி.


நல்ல வெயில் காலங்களில் இதை சாப்பிடுவது நல்லது.
வயிற்று வலி சமயங்களில் இதை சாப்பிட நல்ல பலனை 2 நிமிடத்தில் தரும்

மேலும் சில குறிப்புகள்


Comments

நீர்மோர் சுவையாகவும் நல்ல வாசனையாகவும் சூப்பர் ஆக இருந்தது இஞ்சி போட்டு செய்தது இதுவே முதன்முறை
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்