சிக்கன் சாப்ஸ்

தேதி: October 22, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோழி -- 1 கிலோ
இஞ்சி -- 1 அங்குலம்
பச்சைமிளகாய் -- 10 என்னம்
பெரிய வெங்காயம் -- 1 என்னம்
முட்டை -- 3 என்னம்
உப்பு -- தே.அ
எண்ணைய் -- பொரிக்க


 

இஞ்சி, பச்சைமிளகாய், பெரிய வெங்காயம் மூன்றையும் நன்கு அரைக்கவும்..
இநத மசாலாவுடன் உப்பு சேர்த்து கோழித்துண்டுகளுடன் சேர்த்து பிசிறி 15 நிமிடம் வைக்கவும்.
பின் தனி பாத்திரத்தில் போட்டு குக்கரில் வைத்து ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும்.

பின் குக்கரை திறந்து கறித்துண்டுகள் உள்ள பாத்திரத்தி தனியே எடுத்து 4 நிமிடம் ஆற வைக்கவும்.
3 முட்டையுடன் உப்பு சேர்த்து நன்றாக நுரை வர அடிக்கவும்.
வாணலியில் எண்ணைய் ஊற்றி காயவைக்கவும்.
கோழிதுண்டுகளை முட்டையில் முக்கி வாணலியில் காய்ந்த எண்ணையில் போட்டு பொரிக்கவும்.
சிக்கன் சாப்ஸ் ரெடி


மேலும் சில குறிப்புகள்