மட்டன் சாப்ஸ்

தேதி: October 22, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மட்டன் -- 1 கிலோ
சிவப்பு மிளகாய் -- 12 என்னம்
மிளகு -- 1/2 டீஸ்பூன்
சீரகம் -- 1/2 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் -- 1/2 டீஸ்பூன்
இஞ்சி -- 1/2 அங்குலம்
கிராம்பு -- 3 என்னம்
சிறிய வெங்காயம் -- 10 என்னம்
பூண்டு -- 8 பல்
கசகசா -- 1 டீஸ்பூன்
எண்ணைய் -- 6 டீஸ்பூன்
தக்காளி -- 2 என்னம் (நறுக்கியது)
உப்பு -- தே.அ
மஞ்சள் தூள் -- 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை -- 1/4 கட்டு (நறுக்கியது)
தாளிக்க:
பட்டை -- 1 அங்குலம்
கிராம்பு -- 2 என்னம்
பெருஞ்சீரகம் -- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -- 2 இனுக்கு


 

சிவப்பு மிளகாய், மிளகு, சீரகம், பெருஞ்சீரகம், இஞ்சி, கிராம்பு, சிறிய வெங்காயம், பூண்டு, கசகசா இவற்றை எல்லாம் அரைக்கவும்.
கறியுடன் அரைத்த மசாலாவை சுத்தம் செய்த கறியுடன் கலந்து 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்த பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு தாளித்து தக்காளியையும் சேர்க்கவும்.
தக்காளி நன்கு வதங்கிய பின் ஊற வைத்த கறியை 5 நிமிடம் வதக்கி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
கொதித்தபின் தீயை மிதமாக வைத்து கறி வெந்து மசாலா கெட்டியான பின் கொத்தமல்லி தழையை தூவி ஒரு கிளறு கிளறி இறக்கி பறிமாறலாம்.
மட்டன் சாப்ஸ் ரெடி


மேலும் சில குறிப்புகள்