சுறாமீன் புட்டு

தேதி: October 22, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பால் சுறாமீன் புட்டு -- 1/2 கிலோ
பச்சைமிளகாய் -- 4 என்னம் ( பொடிதாக நறுக்கியது)
உப்பு -- தே.அ
மஞ்சள் தூள் -- 1 டீஸ்பூன்
சிறிய வெங்காயம் -- 1/4 கிலோ ( பொடிதாக நறுக்கியது)
எண்ணைய் -- தாளிக்க தே.அ


 

மீனை பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கி லேசாக உப்பு, மஞ்சள்தூள் தடவி வேக வைக்கவும்.
பின் மேலே உள்ள மெல்லிய தோல், எலும்பை நீக்கி தூள் செய்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணைய் ஊற்றி வெங்காயம்,பச்சைமிளகாய் போட்டு நன்கு வதக்கி பின் தூள் செய்த மீனை இதில் சேத்து நன்கு கிளறி வதக்கி இறக்கவும்.
உப்பு தேவை எனில் சேர்க்கவும்.
சுறாமீன் புட்டு ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

சுபா சுறாமீன் புட்டு நன்றாக இருந்தது. செய்வதும் மிகவும் சுலபம்.
உறைப்பு குறைத்து சமைத்தால் சிறியவர்களும் விருப்பி சாப்பிடுவார்கள். நன்றி .அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.