மீன் கோலா

தேதி: October 22, 2007

பரிமாறும் அளவு: 7 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சதை பற்றுள்ள மீன் -- 1/2 கிலோ ( நன்கு சுத்தம் செய்து துண்டுகளாக்கியது)
முட்டை -- 4 என்னம்
பூண்டு -- 6 பல்
சிறிய வெங்காயம் -- 100 கிராம் ( பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் -- 6 என்னம் ( பொடியாக நறுக்கியது)
இஞ்சி -- 1 அங்குலம்
பட்டை -- 1 அங்குலம்
கிராம்பு -- 2 என்னம்
சோம்பு -- 1 டீஸ்பூன்
பொட்டுக்கடலை -- 200 கிராம் (நைசாக அரைத்தது)
மஞ்சள் தூள் -- 1/2 டீஸ்பூன்
நெய் -- 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் பால் -- 1/2 கப்
புதினா -- 1/4 கப் ( பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை -- 2 இனுக்கு
கொத்தமல்லி தழை -- 1/4 கப் ( பொடியாக நறுக்கியது)
எண்ணைய் -- பொரிப்பதற்கு
உப்பு -- தே.அ


 

மீனை உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து, தோல், எலும்பை நீக்கி மீனை உதிர்த்து கொள்ளவும்.
பட்டை, கிராம்பு, சோம்பு மூன்றையும் பொடித்துக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டை தட்டிக் கொள்ளவும்.
வாணலியில் நெய்யை ஊற்றி இஞ்சி, பூண்டு தட்டியதை போடவும்.
வாசம் வந்ததும் பட்டை, கிராம்பு, சோம்பு தூளையும், வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
கொத்தமல்லி தழை, புதினா இலையையும் போட்டு உதிர்த்த மீனையும் போட்டு நன்கு கிளறவும்.

முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு நுரை வர அடிக்கவும்.
முட்டை கலவையில் பொடித்த பொட்டுக்கடலை, உதிர்த்த மீன், தேங்காய் பால், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் உருண்டைகளை பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
மீன் கோலா ரெடி.


மேலும் சில குறிப்புகள்