உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

அப்பிள் பை

 

அமெரிக்காவின் தேசிய உணவு என கிண்டலாக கூறப்படும் அப்பிள் பை செய்வதற்கு மிகவும் சுலபமானதும் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையானதுமான சிற்றுண்டி ஆகும்.

தேவையான பொருட்கள்

  • அப்பிள் - 4 - 5
  • சீனி / பிரவுண் சீனி - 1/4 கப்
  • உப்பு - 1/4 தேக்கரண்டி
  • கறுவாத்தூள்(cinnamon powder) - 1 சிட்டிகை
  • எலுமிச்சம்பழம் - 1
  • ====
  • மா - 2 கப்
  • சீனி - 1 மேசைக்கரண்டி
  • உப்பு
  • பட்டர் - 1/2 கப் (8 மேசைக்கரண்டி / 1 stick)

செய்முறை

  • அவனை 425 Fஇல் முற்சூடு பண்ணவும்.
  • மாவினுள் உப்பு, சீனி சேர்த்து கலக்கவும்.
  • பட்டரை சிறிய துண்டுகளாக வெட்டவும் (உருக்க வேண்டாம்)
  • பின்னர் மாவினுள் பட்டரை கலந்து ஐஸ் தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு மிருதுவாக குழைக்கவும். (அழுத்த வேண்டாம்)
  • பின்னர் அரைவாசியாக பிரித்து பிளாஸ்டிக் உறையினுள் போட்டு ஃபிரிட்ஜில் 1/2 மணித்தியாலங்கள் வைக்கவும்.
  • எலுமிச்சம் பழத்தில் தோலை துருவி 1 தேக்கரண்டி எடுத்து வைக்கவும்.(lemon zest)லெமன் ஜூஸ் 1 மேசைக்கரண்டி எடுத்து வைக்கவும்.
  • அப்பிளை கழுவி சுத்தப்படுத்தி சிறிய துண்டுகளாக வெட்டவும்.
  • பின்னர் இத் துண்டுகளுடன் சீனி, பிரவுண் சீனி, உப்பு, கறுவாத்தூள், லெமன் தோல்(zest), லெமன் ஜூஸ் சேர்த்து கலக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் இந்த கலவையை போட்டு மிதமான சூட்டில் அவிய விடவும்.
  • தண்ணீர் ஓரளவு வற்றி அப்பிள் துண்டுகள் வெந்ததும் இறக்கி வடித்து வைக்கவும். (அப்பிள் துண்டுகள் கரைய கூடாது)
  • ஃபிரிட்ஜில் வைத்த மாவு உருண்டையில் ஒன்றை எடுத்து ஒரு பேப்பரில் வைத்து சப்பாத்திக்கு உருட்டுவதுபோல பெரிய வட்டமாக தட்டவும். (பெரிய தோசை அளவு வட்டம் அல்லது பை பானிற்குள் வைக்கும் அளவு)
  • இதனை பட்டர் அல்லது பேக்கிங் ஸ்பிறே பூசிய 8 அங்குல பை பானின் (8" pie pan) உள்ளே வைத்து கரைகளை அழுத்தி பானுடன் சேர்த்து ஒட்டவும். (பானின் வடிவில் கிண்ணம் போல இருக்கும்)
  • பின்னர் அவித்த அப்பிள் துண்டுகளை இதனுள் போட்டு நிரப்பவும்.
  • மற்றைய பாதி மாவுருண்டையை எடுத்து சிறிய வட்டமாக தட்டி அப்பிளின் மேலே போட்டு முழுவதுமாக மூடவும். Or தட்டிய மாவை சிறிய கீலங்களாக வெட்டி பின்னல் போல போட்டும் மூடலாம்.
  • பின்னர் இரு மா தகடுகளையும் ஒன்றாக சேர்த்து ஓரங்களை அழுத்தி விடவும். (மேலதிகமாக இருக்கும் மாவை வெட்டி அகற்றவும்)பின்னர் கத்தியால் மேல் மாவில் X வடிவில் வெட்டி விடவும்.
  • பின்னர் மாவின் மேற்பகுதியில் ஒரு பிரஷால் சிறிது தண்ணீர் தடவி பிரவுண் சீனி சிறிது தூவி விடவும்.
  • பின்னர் இதனை 425 F இல் முற்சூடு படுத்திய அவனில் 25 - 30 நிமிடங்கள் பேக் செய்யவும்.
  • சுவையான அப்பிள் பை தயார். ஆறியதும் துண்டுகளாக்கி பரிமாறாவும்.

குறிப்பு:

அப்பிளை அவித்து வடிய விட்டு பெறப்பட்ட சிரப்பினுள் சிறிது ஐஸ் தண்ணீர் சீனி சேர்த்து அப்பிள் ஜூஸாக அருந்தலாம்.

வழங்கியவர்

Mrs. B. Narmatha

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

8 துண்டுகள் 20 நிமிடங்கள் 60 - 65 நிமிடங்கள்
  random food image


comments
ஆப்பிள் பை
அக்டோபர் 23, 2007 - 11:49am - வழங்கியவர் ambika_dt

ஹைய்யோ இப்பதான் இந்த ஆப்பிள் ரெசிப்பீஸ் தேடிக் கொண்டு இருந்தேன்.மா என்று நீங்கள் குறிப்பிட்டு இருப்பது எதை ? கோதுமை மாவா இல்லை மைதா மாவா?நன்றி

மா
அக்டோபர் 23, 2007 - 12:10pm - வழங்கியவர் ambika_dt

ஒகே மைதா மாவென்றுதான் நினைக்கிறேன்.. அதிசியமா தேவையான பொருட்கள் என்னிடம் இருக்கு.. செய்து பார்கிறேன்.நன்றி

மைதாமாதான்......
அக்டோபர் 23, 2007 - 8:18pm - வழங்கியவர் Nila2006

மைதாமாதான். பொதுவா கேக், குக்கீஸ், பை போன்றவற்றிற்கு மைதாமாதான் பாவிப்பது. :) கேக்கிற்கு bleached மைதாதான் தேவை ஆனால் பைக்கு unbleached மைதா பாவிக்கலாம்.
-நர்மதா:)

மைதா
அக்டோபர் 24, 2007 - 11:45am - வழங்கியவர் ambika_dt

மிக்க நன்றி நர்மதா