யம்மி யம்மி மெக்ரூனி

தேதி: October 23, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மெக்ரூனி -- 1 1/2 கப்
வெங்காயம் -- 1 கப் (நறுக்கியது)
தக்காளி -- 1 என்னம் (நறுக்கியது)
பச்சை மிளகாய் -- 2 என்னம் (நறுக்கியது)
மிளகாய் தூள் -- 1/2 டீஸ்பூன்
தனியா தூள் -- 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -- 2 சிட்டிகை
உப்பு -- தே.அ


 

முதலில் மெக்ரூனியை, மூழ்கி அதன் மேல் இரு இன்ச் தண்ணீர் இருக்குமாறு மூழ்கவைத்து உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும்.
நடுவில் கிளறி மெக்ரூனி தனித்தனியே இருக்குமாறு கிளறி வெந்ததும் இறக்கி வடிகட்டி வைக்கவும்.
வாணலியில் 2 ஸ்பூன் எண்ணைய் ஊற்றி வெங்காயத்தை போட்டு 1 நிமிடம் நன்கு வதக்கவும்.
அதனுடன் தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
இதனுடன் மிளகாய்தூள், தனியா தூள் சேர்த்து ஒரு வதக்கு வதக்கி 1/4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.பின் மெக்ரூனி சேர்த்து 3 நிமிடம் நன்கு வதக்கவும்.
உப்பு தேவை எனில் மீண்டும் சேர்த்துக் கொள்ளலாம்.
யம்மி யம்மி மெக்ரூனி ரெடி.


மிகவும் விரைவாக செய்யக்கூடியது.
இது நன்றாகவும் இருக்கும்.
மெக்ரூனி சேர்க்கும் முன் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறி முட்டை வெந்தபின் மெக்ரூனி சேர்த்து கிளறி இறக்கினால் இன்னும் நன்றாக இருக்கும்

மேலும் சில குறிப்புகள்