கோபி ஆலு மசாலா

தேதி: October 23, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (6 votes)

 

சிறிய காலி ஃப்ளவர் - ஒன்று
நீளமாக நறுக்கிய உருளைக்கிழங்கு - 2
சீரகம் - அரை தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - அரை தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய இஞ்சி - கால் தேக்கரண்டி
நசுக்கிய பூண்டு - கால் தேக்கரண்டி
மிளகாய்தூள் - அரை தேக்கரண்டி
தனியாத் தூள் - கால் தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - கால் தேக்கரண்டி
தயிர் - 4 மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

காலி ஃப்ளவரை சிறு சிறு பூக்களாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் உப்பு, மஞ்சள் தூள் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
வெந்த பின் நன்றாக வடிகட்டி கொள்ளவும். கிழங்கையும் வேகவைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் போட்டு பொரிந்தவுடன் பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டை போட்டு வதங்கியவுடன் தயிரை விட்டு கிளறவும்.
பின் வேகவைத்த காலிஃப்ளவர், கிழங்கை சேர்த்து 3 நிமிடங்கள் நன்றாக கிளறவும்.
பின் மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறி குறைந்த தீயில் 10 நிமிடங்கள் வைத்து கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்