தாள்சா

தேதி: October 23, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பருப்பு வேக வைக்க:
கடலை பருப்பு - அரை ஆழாக்கு
துவரம் பருப்பு - கால் ஆழாக்கு
மஞ்சள் - அரை தேக்கரண்டி
காய் வேக வைக்க:
முருங்கைக்காய் - ஒன்று
கத்திரிக்காய் - மூன்று
கருணைக்கிழங்கு - ஒரு துண்டு
வாழைக்காய் - ஒன்று
வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
பச்சை மிளகாய் - இரண்டு
மிளகாய் தூள் - ஒன்னறை தேக்கரண்டி
தனியாத்தூள் - 3 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
புளி - ஒரு பெரிய எலுமிச்சை அளவு
தாளிக்க:
எண்ணெய் - ஐந்து தேக்கரண்டி
கடுகு - இரண்டு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
பூண்டு - நான்கு
கறிவேப்பிலை - ஒரு பெரிய கொத்து
கொத்தமல்லி தழை - கொஞ்சம் மேலே தூவ


 

காயில் சேர்க்க வேண்டிய அனைத்து பொருட்களையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைத்து புளியை கெட்டியாக கரைத்து ஊற்றவும்.
இரண்டு பருப்பையும் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து கரண்டியால் மசித்து புளிவாசம் அடங்கியது ஊற்றவும்.
கடைசியில் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து கொட்டி கொத்தமல்லி தூவி இறக்கவும்.


இஸ்லாமிய இல்லங்களில் ஒரு விஷேசம் என்றால் பகாறா கானா, கறி உருளை கிழங்கு சால்னா, தால்சா, மட்டன் ஃப்ரை (அ) மட்டன் கூட்டு, வெங்காய முட்டை, அப்பளம், ஏதாவது இரு வகை ஸ்வீட்.
இஸ்லாமிய இல்லங்களில் பகாறா கானாவுக்கு செய்யும் சைட் டிஷ்களில் இதுவும் ஒன்று. இதில் மட்டன் எலும்பு கொஞ்சம் சேர்ப்பார்கள். தேவையானால் சேர்த்துக் கொள்ளலாம். மாங்காயும் சேர்த்து கொள்ளலாம், அப்படி மாங்காய் சேர்ப்பதாக இருந்தால் புளியின் அளவை குறைத்துக் கொள்ளவும்.

மேலும் சில குறிப்புகள்