உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

பரோட்டா கீமா (பாக்கிஸ்தான்)

 

பாக்கிஸ்தானியர்களின் மிக முக்கியமன அயிட்ட்டம் இது ஏன் மதிய உணவு கூட இது தான்.ரொம்ப சத்து. துபாயில் முக்கால் வாசி பேச்சுலர் உடைய காலை உணவும் இது தான்.

தேவையானப் பொருட்கள்

  • பரோட்டா தயாரிக்க
  • ------------------
  • மைதா - மூன்று கப்
  • உப்பு - அரை தேக்கரண்டி
  • சோடாமாவு - ஒரு பின்ச்
  • பட்டர் - மூன்று மேசைக்கரண்டி
  • பால் - கால் கப்
  • கீமா தயாரிக்க
  • -------------
  • கீமா - கால் கிலோ
  • எண்ணை - முன்று தேக்கரண்டி
  • வெங்காயம் - ஐந்து
  • இஞ்சி பூண்டு பெஸ்ட் - இரண்டரை தேக்கரண்டி
  • தக்காளி - ஒன்று
  • பச்ச மிளகாய் - இரண்டு
  • மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  • சீரகத்தூள் - கால் தேகாரண்டி
  • கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
  • தனியா தூள் - கால் தேகரண்டி
  • உப்பு - தேக்கரண்டி

செய்முறை

  • மைதாவில் சோடா,உப்பு, பட்டர் பால் சேர்த்து கலக்கி, தண்ணீர் ஊற்றி பிசைந்து ஊற வைக்கவும்.
  • இப்போது நல்ல ஊறவைத்த பரோட்டாமவை ஒரு பெரிய எலுமிச்சை அளவு எடுத்து பறத்தி அதில் ஒரு தேக்கரண்டி முழுவதும் தடவி புடவை கொசிவம் வைப்பது போல் வைத்து சுருளாக சுற்றி ஒரு தட்டில் அடுக்கி வைக்கவும்.
  • கீமாவை சுத்தம் செய்து ஒரு வடிகட்டியில் போட்டு நீரை வடிக்கவிடவும்.
  • எண்ணையை காய வைதது வெங்கயத்தை பொடியாக அரிந்து போட்டு வதக்கி இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து பொன் முறுவலாகும் வரை சிம்மில் வைக்கவும்.
  • பிறகு பொடியாக நறுக்கிய கொத்து மல்லி,பச்சமிளகாய்,தக்காளியை போட்டு வதக்க்கவும் வதக்கி எல்லா தூள்களையும் போட்டு உப்பும் சேர்த்து கிளறி கடைசியில் கீமாவைப்போட்டு கிளறி சிம்மில் ஏழு நிமிடம் வேகவைத்து இறக்கவும்.கிமா ரெடி.
  • இப்போது தட்டில் அடுக்கி வைத்துள்ள ஒவ்வொரு பரோட்டா சுருளயும் வட்ட வடிவ பரொட்டாகளாக தேய்த்து சுட்டெடுத்து ரெடியாக உள்ள கீமாவை இரன்டு மேசைக்கரண்டி அளவு வைத்து ரோல் பண்ண வேண்டியது.எட்டு பரோட்டா வரும்.

குறிப்பு:

நீங்கள் கூட எந்த காய்கறி வேண்டு மானாலும் சேர்த்து கொள்ளலாம். கோதுமை பரோட்டா செய்து இதை உள்ளே வைத்து சுருட்டினல் சாப்பிடும் போது நல்ல பஞ்சி மாதிரி இருக்கும்.குழந்தை களுக்கு ஸ்கூலுக்கு கொடுத்து அனுப்பலாம்,ஆபிஸுக்கும் எடுத்து செல்லலாம்.இந்த பரோட்டா கீமாவை சாப்பிட்டு விட்டு தான் பாக்கிஸ்தானியர்கள் ஒரு ஏசி ஒருத்தரா தூக்கி முதுகில் ஏற்றி கொண்டு போகிறார்கள். நம்ம ஊரு தயிர் சாதம் எல்லாம் ஒன்று முடியாது.

வழங்கியவர்

ஜலீலா, துபாய்.

பரிமாறும் அளவு

நான்கு பேருக்கு
random food image


comments