சிக்கன் லாலிபாப் சமையல் குறிப்பு - 5846 | அறுசுவை


சிக்கன் லாலிபாப்

food image
வழங்கியவர் : Jaleela Banu
தேதி : புதன், 24/10/2007 - 17:08
ஆயத்த நேரம் : 1 hr 15 min
சமைக்கும் நேரம் : 20 min
பரிமாறும் அளவு : 4 person

 

 • சிக்கன் லெக் பீஸ் - எட்டு
 • இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசைக்கரண்டி
 • உப்பு - தேவையான அளவு
 • பச்சை மிளகாய் - 6 (அரைத்து ஊற்றவும்)
 • சில்லி சாஸ் - அரை தேக்கரண்டி
 • டொமேட்டோ சாஸ் - அரை தேக்கரண்டி
 • கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
 • மிளகு தூள் - கால் தேக்கரண்டி
 • முட்டை - இரண்டு (வெள்ளை கரு மட்டும்)
 • மைதா - ஐம்பது கிராம்
 • ரெட் கலர் - ஒரு பின்ச்
 • தண்ணீர் - அரை கப்
 • சர்க்கரை - கால் தேக்கரண்டி

 

 • லெக் பீஸை சுத்தம் செய்து கழுவி லெக் சைடில் உள்ள தோலை எடுத்து குச்சி மட்டும் இருப்பது போல் கட் செய்து கொள்ளவும். (பிடித்து சாப்பிடவதற்கு)
 • சிக்கனில் அனைத்து மசாலாக்களையும் போட்டு ஒன்றாக கலந்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
 • முட்டையின் வெள்ளை கருவை நன்கு நுரை பொங்க அடித்து வைத்து கொள்ளவும்.
 • அதில் இந்த சிக்கனை தோய்த்து எடுத்து கொள்ளவும். எண்ணெயை காயவைத்து சிக்கன் லாலிபாப்பை போட்டு பொரித்து எடுத்து கொள்ளவும்.
 • பொரித்தெடுத்து தட்டில் அடுக்கி வைத்து உருக்கிய பட்டர் கொஞ்சம், கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கி தூவி பரிமாறவும்.
இந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..அன்புள்ள பர்வீன்.

அன்புள்ள பர்வீன்.
சிக்கன் பிரை நிறைய ரெஸிபி இருக்கு
இதை டிரை பண்ணுங்கள்.
யாரும் சமைக்கலாமில் ஹைதராபாத் சிக்கன் 65 இருக்கு அது ரொம்ப நல்ல இருக்கும் போன்லெஸ் என்றால், என் ரெஸிபியில் பெப்பர் சிக்கன் இருக்கு.
ஜலீலா

Jaleelakamal

அன்புள்ள பர்வீன்.

அன்புள்ள பர்வீன்.
சிக்கன் பிரை நிறைய ரெஸிபி இருக்கு
இதை டிரை பண்ணுங்கள்.
யாரும் சமைக்கலாமில் ஹைதராபாத் சிக்கன் 65 இருக்கு அது ரொம்ப நல்ல இருக்கும் போன்லெஸ் என்றால், என் ரெஸிபியில் பெப்பர் சிக்கன் இருக்கு.
ஜலீலா

Jaleelakamal

அக்கா

அக்கா லாஸ்டில் முட்டையில் முக்கி போடனும்னு சொல்லுவதற்க்கு பதில் மசாலாவில் முக்கி போடனும்னு சொல்லி இருக்கீங்க திருத்திடுங்க

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்லியா

மர்லியா ரொம்ப நன்றி பா திருத்தி விட்டேன்.

ஜலீலா

Jaleelakamal

சிக்கன் லாலிபாப் ( ஜலீலா அக்கா )

ஜலீலா அக்கா இது செய்யலாம்னு பார்த்தேன் ஆனால் தண்ணீர்னு குறிப்பில் இருக்கே அது எதற்க்கு,அப்புறம் மைதாமாவு செய்முறையில் இல்லையே. முட்டையில் முக்கி,மைதாவில் பிரட்டி பொரிக்கனுமா.நன்றி.

அன்புடன் கதீஜா.

கதிஜா சாரிப்பா

கதிஜா சாரிப்பா ஒரு பாயிண்ட் இதி விட்டுட்டேன்
சிக்கனில் சால்ட் சேர்த்து வெளியில் என்றால் 5 நிமிடம் வேகவைத்து கொல்ளுங்கள்
குக்கர் என்றல் ஒரு விசிலில் விட்டு இரக்கி தண்ணீரை வடித்து விடுங்கள். பிறகு குறிப்பில் மாற்று கிறேன்,இது ரொம்ப நேரம் ஊறவைப்பதா இருந்தால் வேக வைக்க் கூட தேவையில்லை எல்லாவற்றியும் அப்படியே போட்டு கலக்கி 5 மணி நேரம் ஊறத்து கூட் பொரிக்கலாம்.
ஜலீலா

ஜலீலா

Jaleelakamal

சிக்கன் லாலிபாப்

திருமதி. பர்வீன் அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து தயாரித்த லாலிபாப்பின் படம் picture

பர்வீன் சூப்பரா இருக்கு கிரிஸ்பி லாலி பாப்

வாவ் பர்வீன் கிரிஸ்பி லாலி பாப்.
இதை இனைத்த அட்மினுக்கும் மிக்க நன்றி.

ஈத் முபாரக் ரொம்ப அருமையா வந்துள்ளது போட்டோவும் சூப்பர்,
அழகாக படம் எடுத்து எடுத்து அனுப்பிய உங்களுக்கு ஒரு ரெட் ரோஸ் வைத்து கொள்ளுங்கள். ஆகா நான் சொன்னதும் உடனே வைத்து கொண்டீர்களா?
ம்ம் சூப்பரா இருக்கு.

ஜலீலா

Jaleelakamal

ரெட் ரோஸ்க்கு நன்றி.

ஈத் முபாரக் .நான் படத்துடன் கொடுத்த பிண்னோட்டதிர்க்கு தாங்கள் அழகான பிண்னோட்டம் கொடுத்தமைக்கு நன்றி.என் படம் பார்த்து சூப்பராக இருக்கு என்று சொல்லியமைக்கு மிகுந்த சந்தோஷம்.மேலும் படத்துடன் எடுக்க ஆர்வம் ஏற்படுகிறது.எனக்கு ரோஸ் என்றால் மிகவும் பிடிக்கும்.ஜலீலா நீங்கள் கொடுத்த ரெட் ரோஸ் என் டிரஸ்க்கு மேச்சாக இருக்கு.ரொம்ப தேங்ஸ்.

அன்புடன் பர்வீன்.