மணத்தக்காளி வற்றல் குழம்பு

தேதி: October 25, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 1 (1 vote)

 

மணத்தக்காளி வற்றல் - 3 டீஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
காய்ந்த மிளகாய் - 2
நல்லெண்ணெய் - 3டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
வற்றல் குழம்பு பொடி - 2 அல்லது 3 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
அரிசி மாவு - 1 டீஸ்பூன்


 

வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் மணத்தக்காளி வற்றலைப் போட்டு பொரித்து தனியாக எடுத்து வைக்கவும்.
மீதி எண்ணெயை விட்டு கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து புளியை கெட்டியாகக் கரைத்து விட்டு, உப்பு, மஞ்சள் பொடி, வற்றல் குழம்பு பொடி போட்டு கொதிக்க விடவும்.
பச்சை வாசனை போக நன்கு கொதித்ததும், அரிசி மாவைக் கரைத்து விட்டு கொதிக்கவிட்டு சேர்ந்து வந்ததும் இறக்கி வைத்து பொரித்த மணத்தக்காளியைச் சேர்க்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

how to make the vathal kulambu powder..

how to prepare vatha kulambu podi

நான் இந்த குழம்பு செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது.

சவுதி செல்வி

செல்வி பின்னூட்டத்திற்கு நன்றி.
அன்புடன்
ஜெயந்தி மாமி