இட்லி மஞ்சூரியன்

தேதி: October 25, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

இட்லி - 6
மைதா மாவு - 1 டேபிள்ஸ்பூன்
கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன்
கார்ன் ப்ளோர் - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 4
பூண்டு - 5 பல்
முந்திரி - 8
டொமேட்டொசாஸ் - 1 ஸ்பூன்
உப்பு - சிறிது,
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.


 

இட்லியை விரல் நீளத் துண்டுகளாக கட் செய்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு பேசினில் மைதா மாவு, கார்ன் ப்ளவர், கடலை மாவு மூன்றையும் எடுத்துக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், முந்திரி அரைத்து மாவில் சேர்க்கவும்.
டொமேட்டோ சாஸ், உப்பு சேர்த்து கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் இட்லித்துண்ட்களை கலவையில் முக்கி எண்ணெயில் போட்டு எடுக்கவும்.
சுடச்சுட பரிமாறவும்.
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையைத் தூவியும் பரிமாறலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

EN KUTTYS VIRUMPI SAPITARA ITEM ITHU AVARKALUKKU SOMBU SMALL PIDIKKUM NANUM DIFFARENT COOK PANNUVEN

மாமி நலமாக இருக்கிறீர்களா? உங்களோட இந்த இட்லி மஞ்சூரியன் குறிப்பு சூப்பராக இருந்தது. நேற்று எஞ்சியிருந்த இட்லியில் செய்தேன்.சூப்பராக இருந்தது. நன்றி.அன்புடன் அம்முலு

ஜே மாமி இன்று காலை உங்களுடைய இட்லி மஞ்சூரியன் செய்தேன் ரொம்ப நல்ல இருந்தது,
சூடாக உடனே சாப்பிடனும் போல.

ஜலீலா

Jaleelakamal

மாமி, நேற்று "இட்லி மஞ்சூரியன்" செய்தேன். சிம்ப்ளி சூப்பர்ப், நாங்கள் மூவரும் விரும்பி சாப்பிட்டோம். மல்லியுடன் சேர்த்து வெங்காயமும் தூவிப் பரிமாறினேன்,பார்பிக்கியூ சாஸுடன் சாப்பிட்டோம். மழைநேர மாலைப்பொழுதில் உங்களின் இட்லி மஞ்சூரியனும், பண்டிகை வடையுமாக எஞ்சாய் பண்ணினோம் போங்க....

அன்புடன்:-).....
உத்தமி:-)

திருமதி. ஜலிலா அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து தயாரித்த இட்லி மஞ்சூரியனின் படம்

<img src="files/pictures/aa67.jpg" alt="picture" />