கேரட் ஹல்வா

தேதி: October 25, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

கேரட் - ஒரு கிலோ
பட்டர் - நூறு கிராம்
சர்க்கரை - அரை கிலோ
மில்க் மெய்ட் - அரை டின்
முந்திரி, பாதாம், பிஸ்தா - இருநூறு கிராம்
கிஸ்மிஸ் பழம் - இருபத்தைந்து கிராம்
ஏலம் - நான்கு
கட்டிப்பால் - இரண்டு டம்ளர்
நெய் - ஐம்பது கிராம்


 

கேரட்டை கேரட் துருவியில் சிறிய துருவலில் செதுக்கி கொள்ளவும்.
துருவிய கேரட்டை ஒரு சட்டியை காய வைத்து பட்டரை உருக்கி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
2 மேசைக்கரண்டி நெய், ஏலம், இரண்டு டம்ளர் கெட்டியான பாலை ஊற்றி வேக வைக்க வேண்டும்.
பால் சுருண்டியதும் இரண்டு முந்திரி, பாதாம், பிஸ்தாவில் பாதியை எடுத்து அரைத்து ஊற்றவும்.
நல்லா கிளறிக் கொண்டே இருக்கவும். பிறகு சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை சேர்த்ததும் தண்ணி மாதிரி ஆகும். நல்ல வற்ற விடவும் நீர் வற்றியதும் மில்க் மெய்ட் டின் ஊற்றி கிளறி இறக்கவும்.
கடைசியில் மீதி நெய்யில் மீதி உள்ள முந்திரி, பாதாம், பிஸ்தா, கிஸ்மிஸ் பழத்தை வதக்கி போடவும்.


இஸ்லாமிய இல்ல விசேஷங்களில், பிரியாணிக்கு, கீ ரைஸுக்கு செய்யும் அருமையான சத்தான ஹல்வா, நிறைய செய்து பிரிட்ஜில் வைத்து கொண்டால் தினமும் பிரெட்டில் கூட தடவி சாப்பிடலாம். அப்படியே சாப்பிட்டு கொண்டே வாங்க நல்ல கலரும் கிடைக்கும்

மேலும் சில குறிப்புகள்


Comments

டியர் அட்மின் நீங்கள் இனைத்த படம் அனைத்தும் சமீபத்திய பதிவில் எனக்கு வரவில்லை அதே மாதிரி மற்றவர்கள் குறிப்பும் வரவில்லை.
கேரட் ஹல்வா படத்தை இனைத்ததற்கு மிக்க நன்றி.

ஜலீலா

Jaleelakamal

சகோதரி அவர்களுக்கு,

குறிப்பின் கீழேயே, அதாவது குறிப்புடனே படங்கள் சேர்க்கப்படும்போது அவை சமீபத்திய பதிவுகளில் தெரிய வராது. உங்கள் குறிப்பிற்கான படத்தை அந்த குறிப்பின்கீழ்தான் சேர்க்க வேண்டும்.

குறிப்புகளின் நிறைவு பகுதிக்கு கீழே, கருத்து தெரிவிக்க (பின்னூட்டம்) பகுதியில் படங்கள் சேர்க்கும்போது அவை சமீபத்திய கருத்துக்களில் தெரிய வரும். மற்றவர்கள் படங்களை, நீங்கள் மற்றவர்கள் குறிப்பிற்கு கொடுத்த படங்களை பின்னூட்டம் பகுதியில்தான் சேர்க்க வேண்டும்.

நன்றி அட்மின் ஒகே புரிந்து கொண்டேன் உடனே விளக்கம் அளித்தமைக்கு மிக நன்றி.

மற்ற குறிப்பு நேற்று இரவு ஒரு ஐந்து நிமிடம் அருசுவை பார்த்த போது நசகுல்ல, பாதுஷா எல்லாம் சைடில் இருந்தது இப்போது அந்த குறிப்பு இருக்கான்னு சமீபத்திய பதிவில் பார்த்த போது இல்லை, பிறகு யாரும் சமைக்கலாமில் போய் தேடி படித்தேன்,.
அதான் கேட்டேன்.

ஜலீலா

Jaleelakamal

டியர் அட்மின் நேற்று யாரோ சாம்பார் பொடி கேட்டு இருந்தார்கள் அதற்கு பதில் அளிக்கலாம் என்று சமிபத்திய பதிவில் தேடினால் கிடிக்க வில்லை.

ஜலீலா

Jaleelakamal

ஹாய் ஜலிலா நான் உங்கள்carrot halwa செய்தென் சுவை மிகவும் ப்ரமாதம் இதுபோல் மட்ர குரிபுகலும் செய்துவிட்டு உஙலுகு தெரிவிக்கிரெ

ஹாய் ஜஸினா என்ன புதுவரா வாங்க வாங்க இங்கு ஏராளம் இருக்கு செய்து பார்க்கவே உங்களுக்கு ஒரு வருடம் ஆகும்.
கேரட் ஹல்வா சுவையாக வந்தது குறித்து மிக்க மகிழ்சி.
ஜலீலா

Jaleelakamal