பச்சை பயறு தோசை

வழங்கியவர் : beevi
தேதி : வெள்ளி, 26/10/2007 - 07:57
ஆயத்த நேரம் : 2 மணி நேரம்
சமைக்கும் நேரம் : 10 நிமிடம்
பரிமாறும் அளவு :
- பச்சை பயிறு - 2 டம்ளர்
- சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கியது - 1/2 கப்
- பச்சைமிளகாய் - 5 (பொடியாக நறுக்கியது)
- உப்பு, எண்ணெய் - தேவைக்கு
- கறிவேப்பிலை - 6 இலைகள்(பொடியாக நறுக்கியது)
- பச்சை பயிறை 2 மணி நேரம் ஊற வைத்து கழுவி மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
- தோசை மாவு பதத்தில் நீர் விட்டு கரைத்து உப்பு, கறிவேப்பிலை, அரிந்த வெங்காயம், பச்சை மிளகாய், சேர்த்து கலக்கி எடுக்கவும்.
- தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்தவுடன், தோசை மாதிரி ஊற்றவும்.
- ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சுற்றிலும் ஊற்றி திருப்பி போட்டு எடுக்கவும்.
Note:
இதற்க்கு தொட்டுக்க தேங்காய் சட்னி நல்லா இருக்கும்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
ஹாய் பீவி!இன்று உங்கள் பச்சை பயறு தோசை செய்தேன். கர்நாடகா சமையல் என்றாலும் எம்மூர் சமையல் மாதிரி நன்றாக இருந்தது. தேங்காய் சட்னிக்கு நல்லாய் இருந்தது
நன்றி
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்
அன்புடன் யோகராணி