இது ஒரு கர்னாடகா ஸ்பெசல். இது ஆம்லெட் மாதிரி ருசியாக இருக்கும்.
தேவையானப் பொருட்கள்
- பச்சை பயிறு 2 டம்ளர்
- சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கியது 1/2 கப்
- பச்சைமிளகாய் 5 (பொடியாக நறுக்கியது)
- உப்பு,எண்ணெய் தேவைக்கு
- கறிவேப்பிலை 6 இலைகள்(பொடியாக நறுக்கியது)
செய்முறை
- பச்சை பயிறை 2 மணி நேரம் ஊறவைத்து கழுகி மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
- தோசை மாவு பதத்தில் நீர் விட்டு கரைத்து உப்பு, கறிவேப்பிலை, அரிந்த வெங்காயம், பச்சை மிளகாய், சேர்த்து கலக்கிஎடுக்கவும்.
- தோசை கல்லை அடுப்பில் வைத்து காய்ந்தவுடன், தோசை மாதிரி ஊற்றவும்.
- ஒரு ஸ்பூன் நல்லெண்ணை சுற்றிலும் ஊற்றி திருப்பி போட்டு எடுக்கவும்.
-
-
குறிப்பு
இதற்க்கு தொட்டுக்க தேங்காய் சட்னி நல்லா இருக்கும்.
ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
2 மணி நேரம் |
10 நிமிடம் |