மாங்காய் ஊறுகாய் 3

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பெரிய மாங்காய் - 4
மிளகாய்த்தூள் - 100 மில்லி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு துண்டு
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
உப்பு - 2 பிடி
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி


 

அடுப்பில் வாணலியை வைத்து பெருங்காயத்தையும், வெந்தயத்தையும் வறுத்து பொடித்துக் கொள்ளவும்.
மாங்காயை சுத்தம் செய்து சிறு, சிறுத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
உப்பை மிக்ஸியில் போட்டு பொடி செய்யவும்.
வாணலியில் எண்ணெயை விட்டு கடுகைப் போட்டு தாளித்து மாங்காய்த் துண்டுகளைப் போட்டு வதக்கவும்.
மாங்காய் நன்றாக வதங்கி வெந்ததும் காரப் பொடி, பொடித்த உப்பு, பொடித்து வைத்த பொடியையும் தூவி நன்றாகக் கிளறி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்