ஜவ்வரிசி தக்காளி வற்றல்

தேதி: October 26, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

ஜவ்வரிசி - 1 கிலோ
தக்காளி - 1 கிலோ
பச்சை மிளகாய் - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - 2 டீஸ்பூன்


 

தக்காளியை மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டி வைக்கவும்.
பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் மூன்றையும் அரைத்து வடிகட்டி வைக்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதித்ததும் ஜவ்வரிசியைபோட்டு வேக விட்வும்.
ஜவ்வரிசி வெந்ததும் அரைத்து வடிகட்டி வைத்த தக்காளி, பச்சை மிளகாய் போட்டுக் கிளறி எடுத்து வைக்கவும்.
அதிகாலையிலேயே வெயில் வருவதற்கு முன் ப்ளாஸ்டிக் பேப்பரில், ஸ்பூனால் சிறிது சிறிதாக எடுத்து இட்டு 2 நாள் காய வைத்து எடுத்து வைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மாமி, வெள்ளியன்று இந்த வற்றல் செய்தேன். தக்காளி, மிளகாய், உப்பு, பெருங்காயம் எல்லாமுமாகச் சேர்த்து நைசாக அரைத்து வடிகட்டாமல் செய்தேன். சீரகமும் கொஞ்சம் சேர்த்தேன். திரும்பவும் வீக்கென்டில் இரண்டாவது முறையும் செய்தேன். தைப்பூசத்தன்று பொரித்தேன் மிகவும் நன்றாகயிருந்தது, மூவரும் விரும்பிச் சாப்பிட்டோம்.
நன்றிகள் பல..........

அன்புடன்:-).....
உத்தமி:-)