பாதாம் பூரி

தேதி: October 27, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தேவையான பொருட்கள்:

மைதா மாவு -------ஒரு கப்
பாதாம் பருப்பு ------அரை கப்
சர்க்கரை ----------ஒரு கப்
அரிசி மாவு --------2 டீ ஸ்பூன்
நெய் --------------2 டீ ஸ்பூன்
ஏலக்காய் பொடி -----அரை ஸ்பூன்
குங்குமப்பூ ----------சிறிதளவு
பொரிக்க எண்ணெய் --தேவையான அளவு


 

செய்முறை:

1.பாதாம் பருப்பை வென்னீரில் 2 மணி நேரம் ஊறவைக்கவும்.நன்றாக ஊறியவுடன் மிக்ஸியில் பொட்டு நைஸாக அரைத்துஎடுத்து மைதா மாவுடன் சேர்த்து நன்றாக பிசைந்து அரை மணி ஊறவிடவும்.

2.அரிசி மாவுடன் நெய் சேர்த்து பேஸ்ட் மாதிரி கலந்து வைக்கவும்.

3. பிசைந்து வைத பாதாம் மாவை எடுத்து 8 உருண்டைகள் பூரி போல் உருட்டி நான்கு நான்கு பூரிகளாக இடவும்.ஒரு பூரியை வைத்து அதன்மேல் அரிசி மாவு பேஸ்டை தடவிஅதன் மேல் இன்னொரு பூரியை வைத்து திரும்ப அரிசி மாவு பேஸ்டை தடவி மீண்டும் இன்னொரு பூரியை வைத்து பூரிபோல் கொஞ்ஞம் கனமாக இடவும்.

4.அடுப்பில் வாணலியில் எண்ணெயை காயவைத்து பூரிகளைப் போட்டு பொரித்து எடுக்கவும்.

5. இரண்டு பங்கு சர்க்கரைக்கு ஒரு பங்கு தண்ணீர் சேர்த்து கம்பி பாகு காய்ச்சி இறக்கி வைக்கவும்.
பாகில் ஏலக்காய் குங்குமப்பூ சேர்க்கவும்.
பொரித்த பூரிகளை பாகில் போடு முக்கி எடுத்து ஆற விடவும்.

பாதாம் பூரி தயார்.


மேலும் சில குறிப்புகள்