நண்டு கிரேவி

image

வழங்கியவர் : malathi

தேதி : ஞாயிறு, 28/10/2007 - 16:54

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் :

பரிமாறும் அளவு :

5
2 votes
Your rating: None
 

 

  • நண்டு - அரை கிலோ
  • மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
  • மல்லித்தூள் - 3 தேக்கரண்டி
  • தேங்காய் துருவல் - ஒரு கப்
  • சோம்பு - 2 தேக்கரண்டி
  • தாளிக்கும் வடகம் - பாதி உருண்டை
  • உப்பு, கறிவேப்பிலை - தேவையான அளவு

 

  • நண்டை சுத்தம் செய்து வைக்கவும். தேங்காய் துருவல் சோம்பு இரண்டையும் சேர்த்து அரைக்கவும்.
  • ஒரு வாணலியில் 6 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடு பண்ணவும். வடகம் தாளிக்கவும். வடகம் பொரிந்ததும் நண்டை போடவும்.
  • மிளகாய்தூள், மல்லிதூள் சேர்க்கவும். அரைத்த தேங்காய், சோம்பு விழுதினை சேர்க்கவும். உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். நண்டு வெந்து எண்ணெய் தெளிந்ததும் இறக்கவும்.






hi

whats mean by thalikum vadam

be healthy

be healthy

தாளிக்கும் வடகம்

http://www.arusuvai.com/tamil/node/7589

ஊரில் தான் மொத்தமாக செய்வார்கள்.. எனக்கு 2006ல் கொண்டு வந்தது இன்னமும் இருக்கு

"Success is to be measured not so much by the position that one has reached in life as by the obstacles which he has overcome."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

உங்க நண்டு க்ரேவி செய்தேன். சுவை என்னவென்று சொல்வதம்மா.... ரொம்ப நல்லாயிருக்கு. முறுங்கக்கீரை சாறு செய்ய ரொம்ப ஆசை ஆனால் இங்கு முருங்கைகீரையை இதுவரை நான் பார்த்ததில்லை. ஊருக்கு வந்தால்தான் செய்து பார்க்கனும்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

தனிஷா..!! நண்டு க்ரேவி கொஞ்சம் ட்ரடிஷனல் ஆக இருக்கும். மசாலாப்பொருட்கள் கம்மியாக.........
எங்க வீட்டிலும் எல்லோருக்கும் பிடிக்கும். பாராட்டுக்கு நன்றி..!!