www.arusuvai.com
நண்டு க்ரேவி
தேவையானப் பொருட்கள்
- நண்டு - 1/2 கி,
- மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
- மல்லித்தூள் - 3 டீஸ்பூன்,
- தேங்காய் துருவல் - 1 கப்,
- சோம்பு - 2 டீஸ்பூன்,
- தாளிக்கும் வடகம் - பாதி உருண்டை,
- உப்பு, கறிவேப்பிலை - தேவையான அளவு.
செய்முறை
- நண்டை சுத்தம் செய்து வைக்கவும்.
- தேங்காய் துருவல் சோம்பு இரண்டையும் சேர்த்து அரைக்கவும்.
- ஒரு வாணலியில் 6 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடு பண்ணவும்.
- வடகம் தாளிக்கவும்.
- வடகம் பொரிந்ததும் நண்டை போடவும்.
- மிளகாய்தூள், மல்லிதூள் சேர்க்கவும்.
- அரைத்த தேங்காய், சோம்பு விழுதினை சேர்க்கவும்.
- உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
- நண்டு வெந்து எண்ணெய் தெளிந்ததும் இறக்கவும்.
-