மசாலா சட்னி

தேதி: October 28, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

தேங்காய் துருவல் - ஒரு கப்
வர மிளகாய் - 4
சோம்பு - 1 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 8
பூண்டு பல் - 8
உப்பு, கறிவேப்பிலை - தேவையான அளவு


 

தேங்காய் துருவல், வரமிளகாய், சோம்பு மூன்றையும் சேர்த்து அரைக்கவும்.
வெங்காயம், பூண்டு இரண்டையும் கடைசியாக சேர்த்து அரைக்கவும்.
ஒரு வாணலியில் 4 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடு பண்ணவும்.
கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
அரைத்த சட்னியை போடவும். உப்பு சேர்த்து கொதிக்க விடவும். சட்னி கெட்டியானதும் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இன்னக்கி இந்த சட்னி பன்னினேன் நல்லா இருந்துச்சு மேடம். ஆனால் நான் சட்னில கொஞ்சம் மாற்றம் செய்துட்டேன் சோம்பு சேர்க்கல மேடம் ஆனா டேஸ்ட் எனக்கு பிடிச்சி இருந்துச்சு. சோம்பு சேர்க்காமல் இருந்தால் சுவை மாறுமா? எனக்கு எதுவும் தெரியல பிடிச்சி இருந்துது. நன்றி மேடம்.

காயத்ரி!...சோம்பு சேர்க்காவிட்டால் டேஸ்ட் மாறும். பயப்படாமல் சோம்பு சேர்த்து அரைத்து பாருங்கள். நன்றாக இருக்கும். சட்னியை நல்லா வதக்குவதால் பச்சைவாசனை போய்விடும். இட்லிக்கு இது சூப்பர் காம்பினேஷனாக இருக்கும்.

மாலதிஅக்கா உங்களுடைய மசாலா சட்னிசெய்தேன் நல்ல சுவையாக இருந்தது.

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

துஷ்யந்தி..!! ( நல்ல புராணகாலத்து பெயர்...!! ) மசாலா சட்னி இட்லிக்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.
நன்றி..!!