பெப்பர் பீஸ் மசாலா

தேதி: October 29, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பட்டாணி - ஒரு கப்
வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
தனியாத்தூள் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
வறுத்து பொடிக்க:
மிளகு - அரை மேசைக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - கால் தேக்கரண்டி
எண்ணெய் - ஒன்றரை மேசைக்கரண்டி


 

பச்சை பட்டாணியை சிறிது உப்பு சேர்த்து வேகவைக்கவும்.
பொடிக்க வேண்டியவைகளை வெறும் வாணலியில் வறுத்து பொடித்து கொள்ளவும்.
வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
எண்ணெயை காய வைத்து வெங்காயத்தை போட்டு வதக்கவும், வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நல்ல வதக்கி மிளகாய் தூள், தனியாதூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
பிறகு தக்காளி சேர்த்து வெந்தவுடன் வேக வைத்து வைத்திருக்கும் பட்டாணியை சேர்த்து பொடித்த பொடி, கரம் மசாலாத்தூள் கொஞ்சம் தண்ணீர் உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கி கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி தூவி பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்