முட்டைக்கோஸ் கடலைப்பருப்பு கூட்டு

தேதி: October 29, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முட்டைக்கோஸ் - 400 கிராம்
கடலைப்பருப்பு - 3/4 கப்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
தேங்காய் அரைத்த விழுது - ஒரு மேசைக்கரண்டி
சீரகப்பொடி - ஒரு தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி
மிளகாய்பொடி - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு


 

முதலில் கடலைப்பருப்பை 1/2 மணி நேரம் சுடு தண்ணீரில் ஊற வைக்கவும்.
பிறகு குக்கரில் போட்டு அதில் பாதி வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், மஞ்சள் பொடி ஆகியவற்றை சேர்த்து போதிய நீர் விட்டு 5 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.
மேலும் முட்டைக்கோஸை 2 அங்குல துண்டங்களாக நறுக்கி இதழ்களை பிரித்துப்போட்டு கழுவிக் கொள்ளவும்.
பிறகு பருப்பு வெந்ததில் பாதியை எடுத்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும், மீதமுள்ள பருப்பில் முட்டைக்கோஸைப் போட்டு அதில் சீரகம்பொடி, பாதி பெருஞ்சீரகபொடி (பாதி தாளிப்புக்கு) ஆகியவற்றைப் போட்டு உப்பு சேர்த்து வேகவிடவும்.
பாதி வெந்தப்பிறகு அரைத்த தேங்காய் விழுது, பருப்பு விழுது அகியவற்றை சேர்த்து வேக விடவும்.
வெந்தபின்பு வேறொரு வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும் அதில் பாதி வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதில் போடவும்.
வெங்காயம் பொன்னிறமாக வரும் போது அதில் பெருஞ்சீரகப்பொடி, மிளகாய்பொடி சேர்த்து, பின்பு கறிவேப்பிலையையும் சேர்த்து வதக்கி வெந்த பருப்பில் கொட்டவும்.
இப்பொழுது சுவையான முட்டைக்கோஸ் கடலைப்பருப்பு கூட்டு தயார்.


மேலும் சில குறிப்புகள்


Comments

சூப்பர் கூட்டு,நெய்யில் தாளித்ததில் வீடே வாசனையா இருந்தது.நன்றி உங்களுக்கு!!

மேனகா இதன் ஸ்பெஷலே நெய்யில் தாளிப்பது தான்!அதன் வாசனை தான் இதர்க்கு சுவை அதிகப்பட காரணமாக இருக்கிறது!

ரஸியா அக்கா முட்டைகோஸ் உடன் பொதுவாக துவரம் பருப்புதான் சேர்ப்பேன் அதுப்போல் பெருஞ்சீரகம் புதுசு, அதுமட்டும் அல்லாது தக்காளிப்பழம் வேறு சேர்க்காமல் உண்மையில் மிகவும் அருமையான சுவை அக்கா,

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

எப்படி இருக்கீங்க?உடல் நலம் தேறிட்டீங்களா?உங்களுக்கு காணாமல் போனவர்க பாகம் 2ல் ஒரு பதிவு போட்டேன் ,பார்த்தீர்களா என்று தெரியவில்லை!முட்டைக்கோஸ் கடலை பருப்பு கூட்டு உங்களுக்கு பிடித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி மகா!செய்து பார்த்து பின்னூட்டம் அளித்ததர்க்கு நன்றிமா!!

அருமையான கூட்டு... நல்ல சுவை... மிக்க நன்றி ரஸியா

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

உங்ககிட்ட இப்போதான் முதல் முறைய்யாக பேசுகிறேன்,நல்லா இருக்கீங்களா?அதிரா ஆரம்பித்த சமைத்து அசத்தலாம் பகுதி வெற்றிகரமாக போயிட்டு இருக்கு இந்த சந்தர்ப்பத்தினால் உங்களுடனெல்லாம் பேசும் வாய்ப்பும் கிடைத்துள்ளது!நன்றிமா உங்கள் பின்னூட்டதிர்க்கு!

ரஸியா இந்த குறிப்பு வெளியானபோது செய்யனும் என்று நினைத்து பிறகு மறந்தே போய்விட்டது. அதிராவின் தயவால் இப்போது செய்து பார்த்து விட்டேன். சூப்பராக இருந்தது.

எப்படி இருக்கீங்க?வீட்டில் எல்லோரும் நலமா?எதோ அதிராவின் முயற்ச்சியால் எல்லோருடைய்ய குறிப்பயும் எல்லோரும் செய்கிறார்கள்,அதிராவின் முயற்ச்சிக்கு நம் அருசுவை சகோதரிகள் எல்லோரும் ஒத்துழைக்கிறார்களே!அவர்களைய்யும் பாராட்டதான் வேண்டும்!உங்களைய்யும் தான் !ரொம்ப நன்றி அக்கா!!

ரசியா,

இன்று இந்தக்கூட்டு செய்தோம். ரொம்ப நல்லா இருந்தது.

நன்றி.

Don't Worry Be Happy.