சைனீஸ் மீன் பொரியல்

தேதி: October 30, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

துள்ளுகெண்டை மீன் - 4
பூண்டு பல் - 6
வெள்ளை மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
அஜினோமோட்டோ - ஒரு சிட்டிகை


 

மீனை சுத்தம் செய்து உப்பு போட்டு கழுவி வைக்கவும். பூண்டை துருவி வைக்கவும்.
மீனை இரண்டு புறமும் கத்தியால் கீறவும். மேலும் துருவிய பூண்டு, அதில் மிளகுப்பொடி, அஜினோமோட்டோ ஆகியவற்றைப் போட்டு பிசறி மீனின் மேல் எல்லா இடத்திலும் பரவினாற் போல் தடவவும்.
பிறகு ஒரு நாண் ஸ்டிக் தவாவில் எண்ணெய் விட்டு அதில் மீனை மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.
பொரித்த பின்பு இதன் மேல் நுக்மம் விட்டு ஊற வைக்கவும்.(நுக்மம் செய்முறை எனது சமையல் குறிப்பில் இடம் பெற்றுள்ளது)


இதற்கு உப்பு சேர்க்க கூடாது. மேலே நுக்மம்(ஃபிஷ் சாஸ்)விடுவதால் உப்பு சேர்க்க கூடாது. இது வெள்ளை சோற்றுடன் சாப்பிட ஏற்றதாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அஸ்ஸலாமு அலைக்கும் ரஸியா,
நலமா? பிள்ளைகள் எப்படியிருக்கிறார்கள்? புது வேலை எப்படி? உங்களுடன் பேசியே நாளாகிடுச்சு. 3 த்ரெடுல உங்க கிட்ட பேசினேன். நீங்க பார்த்தீங்களான்னு தெரியலை. நேற்று எங்கள் வீட்டில் உங்கள் சமையல் தான்.சைனீஸ் மீன் பொரியல், நுக் மம், இறால் பஜ்ஜி. சற்று வித்தியாசமாக இருந்தது. என் பிள்ளைகளுக்கு எப்பொழுதும் சைனீஸ்,மலாய் உணவுகள் பிடிக்கும். அவர்களுக்கு பிடித்திருந்தது. அஜினோமோட்டோ சேர்க்கலை. முடிந்தவரை அதை தவிர்த்துடுவேன். காரைக்கால் புஷ்ராவில் படிக்கும் ஃபர்ஹானா உங்களுக்கு உறவா? என்ன உறவு வேண்டும்? நேரம் கிடைக்கும் போது பதிலளிக்கவும்.

அஸ்ஸலாமு அலைக்கும்

எப்படி இருக்கிறீர்கள் ? நான் இந்த சைனீஸ் மீன் பொரியல் இரண்டு முறை செய்தேன் பிள்ளைகளுக்கு பிடித்து இருந்தது ரொம்ப நன்றி இந்த குறிப்புக்கொடுத்ததற்கு போனில் சொல்லிவிட்டேன் இருந்தாலும் இதிலும் பதிவு போடுகிறேன்

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

அறுசுவை தோழிகளே, எனக்கு மீனை தீயில் சுட்டு சாப்பிட ஆசை.என் கணவருக்கு ஆயில் சேர்க்காத உணவு என்றால் ரொம்ப பிரியம்.தயவு செய்து யாரேனும் சுவையான மீன் BBQ ரெசிபி தெரிந்தால் சொல்லவும்.பிரியதுடன் உங்கள் நண்பி .

ASIA WAVOO.M.S.
PEACE BE ON EARTH

hhijk

அஸ்ஸலாமு அலைக்கும்

கிழே உள்ள த்ரெட்டில் போய் பாருங்கள் இதை போல மீனிலும் செய்யலாம் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்

http://www.arusuvai.com/tamil/node/3350

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

நான் நல்லா இருக்கேன் வீட்டில் அனைவரும் நலமா?
இந்த குறிப்பை செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதர்க்கு மிக்க நன்றி!