தேவையான பொருட்கள்
- பேரீச்சம்பழம் - 1 lb
- கட்டிப்பால் (கன்டென்ஸ்ட் மில்க்) - 1 tin
- ரவை - 1/4கப்
- மைதா மா - 1/2 lb
- சீனி - 3 மேசைக்கரண்டி
- பட்டர் - 1/2 lb
- பால்/தண்ணீர் - 3/4 கப்
- கொக்கோ பவுடர் - 3 தேக்கரண்டி
- பேக்கிங் பவுடர் - 1தேக்கரண்டி
- பேக்கிங் சோடா - 1 தேக்கரண்டி
- கஜு(முந்திரி) - சிறிது
- ரெய்சின் - சிறிது
|
செய்முறை
- பேக்கிங் பானிற்கு பட்டர் தடவி வைக்கவும்.
- அவனை 350 F இல்முன்சூடு பண்ணவும்.
- பேரீச்சம் பழத்தை விதை நீக்கி சிறு துண்டுகளாக வெட்டி அப்பாச்சோடா சேர்த்து 1/2 கப் தண்ணீரில் ஊற விடவும்.
- மா, கொக்கோ பவுடர், பேக்கிங் பவுடர் சேர்த்து அரிக்கவும்
- சீனி, பட்டர், கட்டிப்பால், மீதி தண்ணீர் சேர்த்து கிரைண்டரில் நன்கு அடிக்கவும்.
- பின்னர் இந்த கலவையை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு அதனுள் மாக்கலவையை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும். (அடிக்க வேண்டாம்).
- பின்னர் ஊறவைத்த பேரீச்சம் பழம், கஜு, ரெய்சின் சேர்த்து கலந்து பேக்கிங் பானில் கலவையை ஊற்றி பரப்பவும்.
- பின்னர் இதை 350 Fஇல் 35 - 45 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.
- சுவையான பேரீச்சம்பழ கேக் தயார். இதனை ஆறவிட்டு துண்டுகளாக்கி பரிமாறவும்.
|
வழங்கியவர்
Mrs. B. Narmatha
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
60 - 90 நிமிடங்கள் |
50 நிமிடங்கள் |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
4 நிமிடங்கள் 44 நொடிகள் முன்பு -
10 நிமிடங்கள் 11 நொடிகள் முன்பு -
21 நிமிடங்கள் 56 நொடிகள் முன்பு -
22 நிமிடங்கள் 13 நொடிகள் முன்பு -
26 நிமிடங்கள் 19 நொடிகள் முன்பு -
42 நிமிடங்கள் 14 நொடிகள் முன்பு -
48 நிமிடங்கள் 34 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 4 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 42 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 50 நிமிடங்கள் முன்பு -